For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

250 கிராம் அணுகுண்டு போதும்.. இந்தியாவை 22 கூறுகளாக தகர்ப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர் பூச்சாண்டி!

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Pakistan PM Imran Khan said in Lahore that War is not a solution for anything

    இஸ்லாமாபாத்: எங்களிடம் சின்ன சின்ன அணுகுண்டுகள் இருக்கின்றன. பாகிஸ்தானுடன் மோதினால் இந்தியாவை 22 கூறுகளாக போடுவோம் என பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. மேலும் ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர், லடாக் என்ற யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

    இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதிகள் என்னவாகுமோ என்ற கவலையில் பாகிஸ்தான் இருக்கிறது.

    உருகி உருகி லவ் பண்ணேன் சார்.. ஏமாத்திட்டா சார்.. காசை வாங்கி கொடுங்க சார்.. கதறிய கீரிப்புள்ள!உருகி உருகி லவ் பண்ணேன் சார்.. ஏமாத்திட்டா சார்.. காசை வாங்கி கொடுங்க சார்.. கதறிய கீரிப்புள்ள!

    கட்டுரை

    கட்டுரை

    இந்த நிலையில் உலக நாடுகளை துணைக்கு அழைத்த பாகிஸ்தானுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் கடுங்கோபத்தில் இருக்கும் பாகிஸ்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு நியூயார்க் டைம்ஸ் கட்டுரையில் அதன் பிரதமர் இம்ரான் கான் கட்டுரை எழுதினார்.

    மறைமுக மிரட்டல்

    மறைமுக மிரட்டல்

    அதில் அவர் கூறுகையில் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பிரச்னையில் உலக நாடுகள் அக்கறை காட்டாவிட்டால் அணு ஆயுதப் போர் வெடிக்கும் என மிரட்டும் தொனியில் கூறியிருந்தார். இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில் அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற நிலைப்பாடு சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறக்கூடும் என்பதால் மறைமுகமாக மிரட்டல் விடுத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

    தீர்வாகாது

    தீர்வாகாது

    இந்த நிலையில் நேற்று லாகூரில் சீக்கியர்கள் மத்தியில் இம்ரான்கான் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுத நாடுகள். தற்போது பதற்றம் அதிகரிக்கும் பட்சத்தில் உலகத்திற்கு அது அச்சுறுத்தலாக அமையும். போர் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாகாது என கூறினார் இம்ரான்.

    அணுகுண்டுகள்

    அணுகுண்டுகள்

    பாகிஸ்தானில் நான்கானா சாஹிப் என்ற இடத்தில் ரயில்வே நிலைய கட்டுமானப் பணிகளை ரயில்வே துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில் பாகிஸ்தானிடம் 120 கிராம் முதல் 250 கிராம் வரையிலான அணுகுண்டுகள் உள்ளன.

    22 கூறுகளாக உடைப்போம்

    22 கூறுகளாக உடைப்போம்

    இந்த சின்ன அணுகுண்டுகளால் இந்தியாவில் குறிப்பிட்ட பகுதியை அழிக்க முடியும். பாகிஸ்தான் மீது போர் தொடுத்தால் இந்தியா 22 கூறுகளாக உடைப்போம் என மிரட்டல் விடுத்துள்ளார். இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பரில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூளும் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தியவர் ரஷீத்.

    English summary
    Pakistan Railway Minister Sheikh Rashid Ahmed warned Pakistan has small atom bombs to destroy India into 22 parts.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X