For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எல்லையில் எஃப்எம் நிலையங்களை அமைக்கும் பாக். ராணுவம்.. யாருக்காக தெரியுமா... ?

Google Oneindia Tamil News

Recommended Video

    இம்ரான் கான் எச்சரித்த அடுத்த நாளே பாகிஸ்தான் அட்டகாசம்

    இஸ்லாமாபாத்: இந்திய- பாகிஸ்தான் எல்லையில் எஃப்எம் நிலையங்களை பாகிஸ்தான் ராணுவம் அமைக்கிறது. இவை பயங்கரவாதிகள் தொடர்புக்காக பயன்படுத்தப்படவுள்ளது.

    காஷ்மீரை இந்தியாவுடன் ஒருங்கிணைக்கும்விதமாக அதற்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் கோபமடைந்தது.

    மத்திய அரசு

    மத்திய அரசு

    இதையடுத்து இந்தியாவுக்கு எதிராக உலக நாடுகளின் ஆதரவை நாடியது. ஆனால் எந்த நாடும் பாகிஸ்தானை ஆதரிக்கவில்லை. இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என கூறியது. காஷ்மீர் மக்களுக்கு அமைதி, முன்னேற்றம், மக்களுக்கு செழிப்பு ஆகியவற்றை மத்திய அரசு அளிப்பதாக உறுதியளித்துள்ளது.

    ராணுவ தகவல்

    ராணுவ தகவல்

    இதன் விளைவாக ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவி வருகிறது. இது பாகிஸ்தானுக்கு மேலும் எரிச்சலை உண்டாக்கியுள்ளது. இதனால் பாகிஸ்தான் ராணுவம் புதிய எஃப்எம் டிரான்ஸ்மிஷன் நிலையங்களை நிறுவி ராணுவ தகவல் தொடர்பு பிரிவை பயன்படுத்தி கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ள பயங்கரவாதிகள் செய்திகளை அனுப்புகிறது.

    வழிநடத்துதல்

    வழிநடத்துதல்

    சிக்னல் கார்பஸ் என்பது ராணுவ கிளையாகும். இது ராணுவ தகவல் தொடர்புகளுக்கு பொறுப்பாகும். ராணுவ தொடர்பு பொதுவாக வானொலியில் தொலைபேசி, டிஜிட்டல் தகவல் தொடர்புகளைக் கொண்டுள்ளது. அருகிலுள்ள கிராம மக்களை தவறாக வழிநடத்தவும் இது பயன்படுத்துகிறது.

    நடவடிக்கை

    நடவடிக்கை

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தற்போதுள்ள எஃப் எம் நிலைங்களை பாகிஸ்தான் ராணுவம் கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே மாற்றியுள்ளது. பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்ப முயற்சிப்பதில் பாகிஸ்தானின் தவறான எண்ணம் கொண்ட மற்றொரு நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

    English summary
    Pakistan Army is installing new FM transmission stations and using its signal corps to send messages to terrorists near the Line of Control.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X