For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தான் மீண்டும் அந்த தப்பை மட்டும் செய்யாது.. இம்ரான் கான் திட்டவட்டம்

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை அமெரிக்கா ஆளில்லா ட்ரோன் மூலம் போட்டுத்தள்ளியதால் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. அமெரிக்கா ஈரான் இடையே போர் வெடிக்கும் அபாயம் நிலவுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை தணித்து பேச்சுவார்த்தை நடத்த உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் அமெரிக்கா மற்றும் ஈரான் பிரச்சனை தொடர்பாக கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் இந்தப் பிரச்னை தொடர்பாக தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

எந்த ஒரு நெருக்கடிக்கும் ஆளாகாமல் காஷ்மீர் தீர்ப்பை அளித்திருக்கிறது உச்சநீதிமன்றம்: குலாம்நபி ஆசாத்எந்த ஒரு நெருக்கடிக்கும் ஆளாகாமல் காஷ்மீர் தீர்ப்பை அளித்திருக்கிறது உச்சநீதிமன்றம்: குலாம்நபி ஆசாத்

போரில் பங்குபெறாது

போரில் பங்குபெறாது

தனது டுவிட்டர் பக்கத்தில் இம்ரான் கான் கூறுகையில், ``கடந்த காலங்களில் மற்ற நாடுகளின் போர்களில் பங்கெடுத்து தவறுகளைச் செய்திருக்கிறோம். ஆனால் அந்த தவறுகளை மீண்டும் செய்யப்போவதில்லை. பாகிஸ்தான் எந்தப் போரிலும் பங்குபெறப் போவதில்லை. இரு நாடுகளுக்கு இடையிலும் அமைதியைக் கொண்டுவர பாகிஸ்தான் முயற்சிகளை முன்னெடுக்கும்" என்றார்.

பாகிஸ்தான் முயற்சி

பாகிஸ்தான் முயற்சி

ஈரான், அமெரிக்கா, சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவும் மோதலை முடிவுக்கு கொண்டுவர பாகிஸ்தான் முடிந்தவரை முயற்சி செய்யும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

தலைவர்களை சந்திப்போம்

தலைவர்களை சந்திப்போம்

இது தொடர்பாக அவர் கூறுகையில், "சவுதி அரேபியா, ஈரான், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சென்று அங்குள்ள தலைவர்களை சந்தித்து பேசுமாறு நான் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷியை கேட்டுக்கொண்டுள்ளேன். பாகிஸ்தான் இந்த நாடுகளுடன் நட்புறவை மீட்டுக்க முயற்சி செய்யும்.

போர்களை நடத்த மாட்டோம்

போர்களை நடத்த மாட்டோம்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே உள்ள வேறுபாடுகளைத் தவிர்க்க, பாகிஸ்தான் உதவி செய்யவும் தயாராக உள்ளதை அதிபர் ட்ரம்ப்பிடம் தெரிவித்து இருக்கிறேன். போர்களில் இருந்து யாரும் வெற்றிபெறப் போவதில்லை. இப்போது, பாகிஸ்தான் போர்களை நடத்தாது. ஆனால், நாடுகளை ஒன்றிணைக்க முயற்சி செய்யும்" என்றார்.

English summary
Pakistan prime minister imran khan said that Pakistan is ready to play it's role for peace but it can never again be part of any war
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X