For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் இல்லை.. இம்ரான்கானுக்கு நோஸ்கட் கொடுத்த பாக். சர்வதேச கோர்ட் வக்கீல்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Pakistan PM Imran Khan said in Lahore that War is not a solution for anything

    இஸ்லாமாபாத்: காஷ்மீர் விவகாரம் குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் வாதாட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடம் ஆதாரம் ஏதும் இல்லை என சர்வதேச நீதிமன்றத்துக்கான பாகிஸ்தான் வழக்கறிஞரே கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காஷ்மீருக்கு கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்தது. இந்த சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு அவை யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன.

    இதையடுத்து காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச பிரச்சினையாக்க பாகிஸ்தான் முயற்சித்தது. இந்த விவகாரத்தில் உலக நாடுகளை துணைக்கு அழைத்தது பாகிஸ்தான். ஆனால் காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இதில் தலையிட 3ஆவது நாட்டுக்கு உரிமை இல்லை என அத்தனை நாடுகளுமே கையை விரித்துவிட்டன.

    ஜம்மு காஷ்மீர் மாநில கிராம பஞ்சாயத்து தலைவர்களை டெல்லிக்கு அழைத்து அமித் ஷா நடத்திய முக்கிய ஆலோசனைஜம்மு காஷ்மீர் மாநில கிராம பஞ்சாயத்து தலைவர்களை டெல்லிக்கு அழைத்து அமித் ஷா நடத்திய முக்கிய ஆலோசனை

    பிரதமர்

    பிரதமர்

    மேலும் சீனாவுடன் சேர்ந்து கொண்டு ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு சென்றது பாகிஸ்தான். அங்கும் பாகிஸ்தானின் முயற்சி எடுபடவில்லை. இதையடுத்து சர்வதேச நீதிமன்றத்தை நாடவுள்ளதாக பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார்.

    வாதிடுதல்

    வாதிடுதல்

    மேலும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதிகளில் மனித உரிமை மீறல்கள் நடந்து வருவதாக இம்ரான் கான் குற்றம்சாட்டியிருந்தார். இதை வைத்து சர்வதேச நீதிமன்றத்தில் வாதிடப் போவதாகவும் அவர் அறிவித்தார்.

    சபாநாயகர்

    சபாநாயகர்

    இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மாலத்தீவில் நடைபெற்ற தெற்காசிய நாடுகளின் சபாநாயகர்கள் மாநாட்டில், பாகிஸ்தானின் துணை சபாநாயகர் குவாசிம் சூரி காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியிருந்தார். ஆனால், காஷ்மீர் விவகாரம் என்பது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் ஆகும். இதை கடந்த 1947-ஆம் ஆண்டு முதல் இந்த நிலைப்பாட்டை மாலத்தீவுகள் கடைபிடித்து வருகிறது என மாலத்தீவுகளின் சபாநாயகர் முகமது நஷீத் பதிலடி கொடுத்தார்.

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான்

    அதே மாநாட்டில் சர்வதேச அளவில் காஷ்மீர் பிரச்சினையை பாகிஸ்தான் எழுப்பக் கூடாது என இந்தியாவும் பதிலடி கொடுத்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர் கவார் குரேஷியே, இம்ரான் கான் கூறுவது போல் காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடப்பதற்கான போதிய ஆதாரங்கள் ஏதும் பாகிஸ்தானிடம் இல்லை.

    மண்ணை

    மண்ணை

    எனவே காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகிறது என்பதை சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் எழுப்புவது மிகவும் கடினமாகும் என கூறியிருக்கிறார். காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச அரங்குகளில் தொடர்ந்து மூக்குடைப்பட்ட இம்ரான்கான் தற்போது சொந்த மண்ணின் வழக்கறிஞரிடமே கரியை வாங்கி பூசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Pakistan Lawyer at ICJ says that Imrah Khan doesnt have evidence on Kashmir to move it in The Hague.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X