For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அணு ஆயுத திட்டத்தை விரைவுபடுத்துகிறது பாகிஸ்தான்: செயற்கைகோள் புகைப்படத்தில் அம்பலம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தனது ரகசிய அணு ஆயுத திட்டத்தை விரைவு படுத்த திட்டமிட்டு உள்ளது . அணு உலையில் அணு ஆயுத உற்பத்திக்கு பயன்படும் சிக்கலான புளூட்டோனிய விரைவில் உற்பத்தியை தொடங்க உள்ளதாக செயற்கைகோள் பிடித்துள்ள படத்தில் அம்பலமாகியுள்ளது.

குஷாப் அணு உலை வளாகத்தில் பாகிஸ்தான் ரகசியமாக கட்டி வரும் 4வது அணு உலையை செயற்கைக் கோள் உதவியுடன் அமெரிக்க அமைப்பு பல ஆண்டுகளாக கண்காணித்து வருகிறது.

இந்த அணு உலையில் சிறிய வகை அணு ஆயுதங்களை தயாரிக்க புளூடோனியம் என்ற மூலப் பொருள் தயாரிக்கவும் பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இதற்கான தொழில்நுட்பங்களை தவறான முறையில் பாகிஸ்தான் கொள்முதல் செய்துள்ளது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Pakistan likely accelerating covert nuke programme

செயற்கைகோள் புகைப்படம்

குஷாப் அணு உலை வளாகத்தை கடந்த ஜனவரி 15ஆம் தேதி படம் பிடித்த செயற்கை கோள் மூலம் இந்த தகவல் தெரியவந்து உள்ளது.

செயற்கை கோள் படங்களில் குஷாப் அணு உலை வளாகத்தின் 4-வது அணு உலையின் வெளிகட்டுமான வேலை முழுமையாக முடிவடைந்து உள்ளதை காட்டுகிறது. இந்த டிஜிட்டல் செயற்கை கோள் படங்களில் இந்த அறிக்கை சேர்க்கப்பட்டு உள்ளது.

அறிக்கை விபரம்

இது பற்றி வாஷிங்டனில் உள்ள சர்வதேச அறிவியல் மற்றும் பாதுகாப்பு சிந்தனைக்குழு கூறி உள்ளதாவது:

பாகிஸ்தான் கட்டிவரும் நான்காவது அணு உலையின் கட்டுமானப்பணி முழுமை அடைந்து உள்ளது. குஷாப் அணு உலை வளாகம் கன நீர் உற்பத்தி ஆலையை உள்ளடக்கியது. இது முதலில் 1990 ஆம் ஆண்டு உற்பத்தி செய்ய தொடங்கியது. 50 மெகாவாட் கன நீர் உற்பத்தி செய்யும் உலையாகும்.

இந்தியா - பாகிஸ்தான்

இந்தியாவும் பாகிஸ்தானும் 1998 ஆம் ஆண்டு அணுகுண்டு சோதனையை நடத்தின. பாகிஸ்தான் 2000 - 2002 ஆம் ஆண்டுக்கு இடையே 2-வது அணு உலையை அமைத்தது. 2006 ஆம் ஆண்டில் 3 வது அணு உலையும், 2011ல் 4 வது அணு உலையையும் அமைத்தது. என கூறப்பட்டு உள்ளது.

அணு உலைகள் அமைப்பு

வாஷிங்டனில் உள்ள சர்வதேச அறிவியல் மற்றும் பாதுகாப்பு சிந்தனைக்குழு மிக நெருக்கமாக கண்காணித்து பாகிஸ்தான் அணு உலை கட்டுவதை அதன் கட்டிடங்களுடன் 2011 ஆம் ஆண்டு படம் பிடித்து காட்டியது. அதே வளாகத்தில் 2 வது 3 வது அணு உலை கட்டுவதையும் 2011 ஆம் ஆண் ஏப்ரல் மாதம் படம்பிடித்து காட்டியது. 2013 ஆம் ஆண்டு நவம்பர் 1 இல் வெளியிட்ட படத்தில் 4 வது அணு உலை கட்டுவது தெளிவாக காட்டபட்டு உள்ளது.

ஜனவரி 15ல்

தற்போது ஜனவரி 15ஆம் தேதி செயற்கைகோள் பிடித்துள்ள படத்தில் அணு உலை அடுக்கு அணு உலைகளின் இரண்டு மற்றும் மூன்று கூட தற்போது ஆறு துணை கட்டிடங்களுடன் நான்கு முழுமை பெற்றுள்ளதாக அம்பலப்படுத்தியுள்ளது.

மேலும் சர்வதேச அறிவியல் மற்றும் பாதுகாப்பு சிந்தனைக்குழு இரண்டு உதவி கட்டிடங்கள் மேற்கில் அமைந்துள்ள அணு உலை அருகே கட்டுமானப்பணிகள் நடந்து வருகின்றன.

அணு ஆயுத உற்பத்தி

குளிர்விப்பு கோபுரம் வரிசையில் ஆரம்ப பிரிவில் நன்கு தெரிகிறது இது 30 சதவீதம் முடிந்து உள்ளது என கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணு ஆயுத திட்டத்தை விரைவுபடுத்தி வருவது ஆதாரத்துடன் வெளியிடபட்டு உள்ளது இந்தியாவில் பதற்ற நிலையை உருவாக்கி உள்ளது.

இந்தியாவில் ரியாக்சன்

ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொள்கிறார். அப்போது பிரதமர் மோடியும் ஒபாமாவும் சந்தித்து பேச உள்ளனர் இந்த வேலையில் இந்த தகவல் வெளிவந்து உள்ளது அதிர்ச்சி அலைகளை உருவாக்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.

English summary
Evidence has emerged this week suggesting that Pakistan may have accelerated its covert nuclear weapons development programme and rendered operational a nuclear reactor structure located near a heavy water reactor, in a complex that is likely geared toward the production of plutonium.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X