For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவது யார்?.. ஐ.நா. வை பஞ்சாயத்துக்கு அழைக்கும் பாகிஸ்தான்...

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத் : போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவது யார் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. விடம் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய எல்லையில் குறிப்பாக காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. அவ்வப்போது இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் இந்திய ராணுவம் தான் எல்லை மீறுவதாக ஐ.நா. குழுவிடம் புகார் கொடுத்துள்ளது.

border war

பாகிஸ்தானில் உள்ள ஐ.நா. ராணுவ கண்காணிப்பு குழுவில் கொடுத்துள்ள அந்த புகாரில், இந்தியா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தானின் மக்கள் வசிக்கும் பகுதியில் கனரக குண்டுகளை வீசியும், எந்திர துப்பாக்கி தாக்குதல்களை நடத்தியும் வருகிறது

எனவே 1949-ம் ஆண்டில் இருந்து இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லை பகுதியில் நடந்த மோதல்களை ஆய்வு செய்வதுடன், இருநாடுகளுக்கு இடையே உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் ஐ.நா. மேற்பார்வை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.

English summary
Pakistan filed a complaint with the UN over what it called were ceasefire violations by India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X