For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனா வேண்டாம்.. பெரிய சிக்கல் வரும்.. இம்ரான் கானுக்கு பறந்த வார்னிங்.. பின்வாங்கும் பாகிஸ்தான்!

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: சீனாவுடன் பாகிஸ்தான் நெருக்கமாக கூடாது, இது பாகிஸ்தானின் எதிர்காலத்திற்கு நல்லது அல்ல என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை நிர்வாகிகள் அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் வருகிறது.

இந்தியாவுடன் மட்டுமின்றி சீனா தற்போது உலகம் முழுக்க இருக்கும் பல நாடுகள் உடன் மோதலில் ஈடுப்பட்டு வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், வியட்னாம், மலேசியா, பிலிப்பைன்ஸ் என்று பல நாடுகளுடன் கடல் ரீதியாகவும், ராணுவ எல்லை ரீதியாகவும் மோதி வருகிறது.

இன்னொரு பக்கம் இந்தியாவுடன் மிக தீவிரமாக சீனா மோதி வருகிறது. லடாக்கை எப்போது மொத்தமாக ஆக்கிரமிக்கலாம் என்ற குறிக்கோளுடன் சீனா மோதி வருகிறது.

உலக நாடுகள் தனிமைப்படுத்துகிறது

உலக நாடுகள் தனிமைப்படுத்துகிறது

இதனால் சீனாவிற்கு எதிராக உலக நாடுகள் கொந்தளிக்க தொடங்கி உள்ளது. சீனாவை உலக நாடுகள் தனிமைப்படுத்த தொடங்கி இருக்கிறது. முக்கியமாக ஏசியன் குழுவில் இருக்கும் பத்து நாடுகள், குவாட் குழுவில் இருக்கும் இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா,அமெரிக்கா ஆகிய வல்லரசு நாடுகள் சீனாவை ஓரம்கட்டி வருகிறது. இங்கிலாந்தும் கூட சீனாவை எதிர்த்து வருகிறது.

பாகிஸ்தான் ஆதரவும் சிக்கலும்

பாகிஸ்தான் ஆதரவும் சிக்கலும்

உலக நாடுகள் இப்படி சீனாவை எதிர்க்கும் நிலையில் பாகிஸ்தான் மட்டும் சீனாவிற்கு ஆதரவு அளித்து வருகிறது. சீனாவை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் ஆதரித்து வருகிறது. சீனாவின் விமானப்படைக்கு பாகிஸ்தான் ராணுவம் தனது எல்லையில் இடம் கொடுத்துள்ளது. இந்தியாவை எதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு பாகிஸ்தான் இப்படி செய்துள்ளது. ஆனால் இதுவே தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக முடிந்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எழும் எதிர்ப்பு

பாகிஸ்தானுக்கு எழும் எதிர்ப்பு

பாகிஸ்தானை தற்போது உலக நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக எதிர்க்க தொடங்கி உள்ளது. அதன் முதல் அறிகுறி, ஐரோப்பா நாடுகள் பாகிஸ்தானின் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. அந்த நாட்டு விமானிகளிடம் போலி லைசன்ஸ் இருப்பதாக வந்த புகாரை அடுத்து இப்படி செய்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் மீது இருக்கும் கோபம்தான் இதற்கு முதல் காரணம். லைசன்ஸ் எல்லாம் இரண்டாம் பட்சம்தான். சீனாவை ஆதரித்ததால் பாகிஸ்தான் மீது ஐரோப்பா கடும் கோபத்தில் உள்ளது என்கிறார்கள்.

வேறு என்ன

வேறு என்ன

இன்னொரு பக்கம் பாகிஸ்தானுக்கு இரண்டு நாட்கள் முன் ஐநாவிலேயே குட்டு வைக்கப்பட்டது. கராச்சி குண்டுவெடிப்பு குறித்து பாகிஸ்தான் பேசிய அனைத்து விஷயத்திற்கும் ஐநாவில் உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீனாவை தவிர பாகிஸ்தானை யாரும் ஆதரிக்கவில்லை. கராச்சி குண்டு வெடிப்பு தொடங்கி பல விஷயங்களில் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் ராஜாங்க ரீதியாக பலமுறை தோற்றுவிட்டது.

என்ன அறிவுரை

என்ன அறிவுரை

எங்கே சீனாவை ஆதரிக்க போய் உலக நாடுகளின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டி இருக்குமோ என்று பாகிஸ்தான் கடும் அச்சத்தில் இருக்கிறது. இதனால் சீனாவுடன் பாகிஸ்தான் நெருக்கமாக கூடாது, இது பாகிஸ்தானின் எதிர்காலத்திற்கு நல்லது அல்ல என்று பாகிஸ்தானை பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை நிர்வாகிகள் அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் வருகிறது. சீனாவுடனான உறவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

சீனாவின் கள்ளத்தனம்

சீனாவின் கள்ளத்தனம்

அதிலும் பாகிஸ்தானின் உள்நாட்டு பிரச்சனையில் சீனா தேவையில்லாமல் தலையாடுகிறது. சீனாவால் தற்போது பாகிஸ்தானை அரபு நாடுகள் எதிர்க்க தொடங்கி உள்ளது. இன்னொரு பக்கம் சீனா இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளது.தங்கள் நாட்டு உய்கூர் இஸ்லாமியர்களுக்கு எதிராக சீனா செயல்படுகிறது. அப்படி இருக்கும் போது பாகிஸ்தான் சீனாவை ஆதரிப்பது சரி இல்லை என்று அந்நாட்டு அரசியல் வல்லுநர்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர்.

பின்வாங்கும் பாகிஸ்தான்

பின்வாங்கும் பாகிஸ்தான்

இதனால் சீனாவுடன் உறவை பரிசீலிக்கும் முடிவில் இம்ரான் கான் இருக்கிறார் என்கிறார்கள். சீனாவுடன் நெருக்கமாக இருக்க வேண்டாம். இலங்கை போல நட்பு நாடாக மட்டும் இருக்கலாம். நடுநிலையாக இதில் செயல்படலாம் என்று பாகிஸ்தான் நினைப்பதாக கூறுகிறார்கள். இதனால் பாகிஸ்தான் விரைவில் சீனாவிற்கு பெரிய ''கராச்சி பேக்கரி அல்வா'' கொடுக்க போகிறது என்கிறார்கள்!

English summary
Pakistan may distant itself from India - China standoff in Ladakh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X