For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பயங்கரவாதம்.. டிரம்ப் சாடியதை விட்டுவிட்டு பாராட்டியதை மட்டுமே வெளியிட்ட பாக் ஊடகங்கள்

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் பயங்கரவாதம் குறித்தும் பாகிஸ்தான் குறித்தும் அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியிருந்த நிலையில் அவை ஏதும் நடக்காதது போல் பாகிஸ்தானுடன் அமெரிக்காவுக்கு நல்லுறவு உள்ளது என்பதை மட்டும் பாகிஸ்தான் ஊடகங்கள் பெரிதுப்படுத்தியுள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இரு நாட்கள் பயணம் இன்றுடன் முடிவடைகிறது. நேற்றைய தினம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி நடைபெற்றது.

அரசு பள்ளியில் குழந்தைகளோடு குழந்தையாக மகிழ்ச்சியாக இருந்த மெலனியா டிரம்ப்.. வைரல் வீடியோ அரசு பள்ளியில் குழந்தைகளோடு குழந்தையாக மகிழ்ச்சியாக இருந்த மெலனியா டிரம்ப்.. வைரல் வீடியோ

பயங்கரவாதிகள்

பயங்கரவாதிகள்

இந்த நிகழ்ச்சியில் மோடியை வெகுவாக புகழ்ந்து பேசிய டொனால்ட் டிரம்ப், பாகிஸ்தானை உண்டு இல்லை என பேசினார். அவர் பேசுகையில் இந்தியாவும் அமெரிக்காவும் இஸ்லாமிய தீவிரவாதத்தையும் அவர்களது சித்தாந்தங்களையும் வேரறுக்க ஒன்றிணைந்துள்ளன. பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாதிகள், தீவிரவாத அமைப்புகளை ஒழிக்கும் முயற்சியை நான் அதிபராக பொறுப்பேற்ற நாள் முதல் பாகிஸ்தானுடன் இணைந்து எடுத்து வருகிறோம். எங்களுக்குள் உள்ள நல்லுறவை பயன்படுத்தி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா வலியுறுத்தும்.

செய்திகள்

செய்திகள்

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புகள் அமெரிக்க படைகளால் 100% அழிக்கப்பட்டுவிட்டது. ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அல் பக்தாதி கொல்லப்பட்டுவிட்டார். எங்களது தேசத்தின் எல்லைகள் தீவிரவாதிகளுக்கு எப்போதும் மூடப்பட்டதாகவே இருக்கும். யாரேனும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தால் மிகப் பெரிய விலை கொடுக்க நேரிடும் என தெரிவித்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் ஊடகங்கள் டிரம்ப் குறித்த செய்திகளை வெளியிட்டுள்ளது.

டிரம்ப்

டிரம்ப்

அதில் பாகிஸ்தானுடன் அமெரிக்காவும் நல்லுறவு இருக்கிறது என டிரம்ப் கூறியதை மட்டும் வெளியிட்டுள்ளது. மற்றபடி பயங்கரவாதம் குறித்து பாகிஸ்தானை தொடர்புபடுத்தி டிரம்ப் பேசியதை அந்த ஊடகங்கள் கண்டுக் கொள்ளவேயில்லை. அந்நாட்டின் முக்கிய ஆங்கில நாளிதழான டான், இந்தியாவில் பாகிஸ்தானை பாராட்டிய டிரம்ப் என்ற தலைப்பில் செய்து போட்டுள்ளனர்.

ஆக்கப்பூர்வம்

ஆக்கப்பூர்வம்

அது போல் நியூஸ் இன்டர்நேஷனல் என்ற நாளிதழும் பாகிஸ்தானுடனான உறவு நன்றாக இருப்பதாக இந்தியாவில் டிரம்ப் பேச்சு என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் செய்தி வெளியிட்டுள்ளது ஆச்சரியம் அளிக்கிறது. அது போல் இன்றைய தினம் ஹைதராபாத் இல்லத்தில் மோடியுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் பாகிஸ்தான் மண்ணில் தீவிரவாதிகளை ஒழிக்க அமெரிக்க ஆக்கப்பூர்வமான முயற்சிகளை எடுத்து வருகிறது என்றார்.

English summary
Pakistan medias broadcasts good relations with Pakistan despite Donald Trump took a jibe on Pakistan's Islamic terrorism.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X