For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாராளமாக வந்து பாருங்க.. இந்தியா எந்த ஒரு தீவிரவாத முகாம்களையும் அழிக்கவில்லை.. பாகிஸ்தான் சவால்

Google Oneindia Tamil News

Recommended Video

    காஷ்மீர் எல்லையில் நடைபெறும் பரபர சண்டை!

    இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்தியா எந்த ஒரு தீவிரவாத முகாம்களையும் அழிக்கவில்லை என பாகிஸ்தான் ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா இந்த விஷயத்தில் கூறுவது முற்றிலும் பொய் என்றும் விளக்கம் அளித்துள்ளது.

    ஜம்மு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

    இந்த தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் உள்பட 3பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தியது.

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவ.18-ல் தொடங்குகிறது.. கடந்த முறை 36.. இந்தமுறை எத்தனையோ!நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவ.18-ல் தொடங்குகிறது.. கடந்த முறை 36.. இந்தமுறை எத்தனையோ!

    ராணுவ தளபதி பிபின் ராவத்

    ராணுவ தளபதி பிபின் ராவத்

    இந்த தாக்குதலில் 6 முதல் 10 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்பட்டு வந்த மூன்று தீவிரவாத முகாம்களும் அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் நேற்று தெரிவித்தார்.

    முற்றிலும் பொய்

    முற்றிலும் பொய்

    இதற்கு பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் நள்ளிரவில் வெளியிட்டுள்ள டுவிட் பதிவு மூலம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
    அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்தியா எந்த ஒரு தீவிரவாத முகாம்களையும் அழிக்கவில்லை. இந்தியா சொல்வது முற்றிலும் பொய்.

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான்

    வேண்டுமானால் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரி எந்த ஒரு வெளிநாட்டு தூதரையோ அல்லது மீடியாவையோ அழைத்து வரலாம். அவர்களிடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்கள் இல்லை என்பதை நிரூபிக்கிறோம்.

    புல்வமா தாக்குதல்

    புல்வமா தாக்குதல்

    புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்திய ராணுவத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் பொய்களை கூறி இருநாட்டுக்கும் இடையிலான அமைதியை சீர்குலைத்து வருகிறார்கள்.

    அரசியலுக்காக

    அரசியலுக்காக

    சில உள்நாட்டு நலன்களுக்கு நலன்களுக்காகவும், அரசியலுக்காவும் இந்திய இராணுவத்திடம் இருந்து இத்தகைய தவறான கூற்றுக்கள் செய்யப்டுகின்றன. ஆனால் ராணுவ நெறிமுறைகளுக்கு எதிரானது" என்று கூறியுள்ளார்.

    English summary
    The Pakistan military has rejected as "false" the Indian Army's assertion that it targeted at least three terror camps in the PoK
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X