For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இப்படியும் ஒருவர் இருப்பாரா.. சந்திரயான்-2 பின்னடைவு பற்றி பாகிஸ்தான் அமைச்சர் கமெண்ட்டை பாருங்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    சந்திரயான்-2 பின்னடைவு பற்றி பாகிஸ்தான் அமைச்சர் கிண்டல்

    இஸ்லாமாபாத்: இஸ்ரோ ஆய்வு மையம், தனது விக்ரம் லேண்டருடனான தொடர்பை இழந்துள்ள நிலையில், பாகிஸ்தானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பவாட் சவுத்ரி, தொடர்ச்சியாக ட்வீட் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்.

    சின்ன குணம் கொண்ட மனிதர்கள் பெரிய பதவிகளில் அமர்ந்துள்ளனர் என்று சமீபத்தில் இந்தியாவை பார்த்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார். ஆனால், தனது அமைச்சரவையில்தான் அப்படியான ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை இம்ரானுக்கு பவாட் சவுத்ரி நினைவுபடுத்தியுள்ளார் என்றுதான் இதை சொல்ல வேண்டும்.

    நாலாம்தர அரசியல்வாதி மாதிரி, இஸ்ரோ ஆய்வு குறித்து, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் என்ற பதவியில் இருப்பவர் கருத்து தெரிவித்திருப்பதை வேறு எப்படி சொல்ல முடியும்?

    எங்கு போனது விக்ரம்.. தேடிக் கண்டுபிடித்துத் தருமா சந்திரயான் ஆர்பிட்டர்?எங்கு போனது விக்ரம்.. தேடிக் கண்டுபிடித்துத் தருமா சந்திரயான் ஆர்பிட்டர்?

    பொம்மையாம்

    "தயவுசெய்து தூங்குங்கள். பொம்மை சந்திரனில் இறங்குவதற்கு பதிலாக மும்பையில் தரையிறங்கியது, " என்று சவுத்ரி தனது ஒரு ட்வீட்டில் கூறி சந்தோஷப்பட்டுக் கொண்டு உள்ளார். அதேநேரம், இந்திய நெட்டிசன்கள் மட்டுமின்றி, பாகிஸ்தானிலும் கணிசமான நெட்டிசன்கள், பவாத்தை கழுவி கழுவி ஊற்றி வருகிறார்கள்.

    கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

    இதில் வேடிக்கை என்னவென்றால், சந்திரயான் 2, பாகிஸ்தானியர்களை இரவெல்லாம் முழித்திருக்க செய்துவிட்டது என்று கூறி, கிண்டல் செய்கிறார் இந்த நெட்டிசன்.

    தூக்கம் இல்லை

    தூக்கம் இல்லை

    இதேபோல, அபிநந்தன் குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் கூட அடுத்தடுத்த ட்வீட்டுகளில் பேசக்கூடாத வார்த்தைகளை பேசி வம்பிழுத்துள்ளார் இந்த அமைச்சர். மனிதர் ராத்திரி முதல் தூங்கவேயில்லை. தொடர்ந்து பல ட்வீட்டுகளில் புலம்பியபடியே உள்ளார்.

    முதல் முறை கிடையாதே

    முதல் முறை கிடையாதே

    நாசா, சீன விண்வெளி ஆய்வு மையம் என பலவுமே நிலவு ஆய்வில் முதலில் நிறைய முறை சறுக்கியுள்ளன. ஆனால் பாகிஸ்தான் இதுபோன்ற மிஷன்களை கற்பனை கூட செய்து பார்க்க முடியாத நிலையில் உள்ளது. இருப்பினும், இப்படி பேசி தனது அடிமனது ஆதங்கத்தை தணித்துக்கொள்கிறது பாகிஸ்தான்.

    English summary
    Fawad Chaudhry, Pakistan's minister for science and technology, sent out a series of tweets early on Saturday after India's Isro space agency lost contact with its Vikram lander. Vikram was on its descent to the moon when the agency lost contact with it just 2.1km before it reached the lunar surface.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X