For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Breaking News Live: பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல்... நவாஸ் கட்சிக்கு வாக்களிப்பரா மக்கள்?

பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு பதிவு இன்று தொடங்கியது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றம் மற்றும் மாகாண சட்டசபை தேர்தல் வாக்கு பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பெற்றதை அடுத்த நவாஸ் ஷெரீப் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

Pakistan National Assembly election going on today

இந்நிலையில் பனாமா பேப்பரில் நவாஸ் ஷெரீப்பின் பெயர் இடம்பெற்றுள்ளதால் அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு ராஜினாமா செய்தார். இதையடுத்து பிரதமர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதில் இம்ரான் கான் கட்சிக்கும் நவாஸ் ஷெரீப் கட்சிக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

Newest First Oldest First
5:22 PM, 25 Jul

தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கு ஆக.3க்கு ஒத்தி வைப்பு

3ம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் விசாரணை நடக்கும்

2:52 PM, 25 Jul

மாரத்தா இடஒதுக்கீடு போராட்டம் முடிவிற்கு வந்தது

மகாராஷ்டிராவில் நடந்த மாரத்தா போராட்டம் முடிவிற்கு வந்தது

இடஒதுக்கீடு கோரி மாரத்தா இன மக்கள் போராடி வந்தனர்

1:54 PM, 25 Jul

தொலைபேசி இணைப்பு வழக்கில் மாறன் சகோதரர்களை விடுதலை செய்தது செல்லாது

சென்னை சிபிஐ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தது ஹைகோர்ட்

முறைகேடு வழக்கை சிபிஐ நீதிமன்றம் விசாரிக்க உத்தரவு

1:43 PM, 25 Jul

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் குண்டுவெடிப்பு

பாகிஸ்தான் குயெட்டா வாக்குச்சாவடிக்கு வெளியே குண்டுவெடிப்பு

குண்டுவெடிப்பில் 28 பேர் பரிதாப பலி

5 போலீஸ் உட்பட 28 பேர் பலி, 40 பேர் படுகாயம்

1:17 PM, 25 Jul

ராணுவ விமானத்தை பயன்படுத்தி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்- மு.க.ஸ்டாலின்

சலுகை பெற்ற பன்னீர்செல்வமும் பதவி விலக வேண்டும்

கருணாநிதிக்கு லேசான காய்ச்சல் உள்ளது, உடல்நலம் சீராக உள்ளது- மு.க.ஸ்டாலின்

1:11 PM, 25 Jul

கரூரில் நில அதிர்வு

பிற்பகலில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சம்

சமீபத்தில் சேலத்தில் நில அதிர்வு ஏற்பட்டது நினைவிருக்கலாம்

1:11 PM, 25 Jul

குஜராத் பட்டேல் இன தலைவர் ஹர்திக் பட்டேலுக்கு 2 வருட சிறை

2015ல் நடந்த பாஜக எம்எல்ஏ அலுவலக தாக்குதல் வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு

ஹர்திக் பட்டேல் ஆதரவாளர்கள் 2 பேரும் சிறை தண்டனை விதிப்பு

1:10 PM, 25 Jul

அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கு: புழல் சிறையில் அடையாள அணி வகுப்பு

நீதிபதிகள் முன்னிலையில், கைதிகள் 17 பேரையும் சிறுமி அடையாளம் காட்டுகிறார்

1:10 PM, 25 Jul

சென்னை குரோம்பேட்டை தனியார் பள்ளி தாளாளர் சந்தானம் கைது மாணவர்களையும் பெற்றோர்களையும் தரக்குறைவாக பேசியதாக சந்தானம் மீது புகார்

பீர்க்கங்கரணை போலீஸார் சந்தானத்தை கைது செய்தனர்

சந்தானத்தை துணை ஆணையர் முத்துசாமி, சேலையூர் உதவி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் விசாரித்தனர்

மாணவர்களிடம் இருந்து தலா ரூ. 2 லட்சம் டெபாசிட் தொகையாக செலுத்த கோரியதாகவும் புகார்

சந்தானத்தை கண்டித்து பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்

பெற்றோர் போராட்டத்தை தொடர்ந்து சந்தானம் கைது

1:10 PM, 25 Jul

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு குறைப்பு

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு 60,000 கன அடியாக குறைப்பு

நீர் திறப்பு 76,611 கன அடியில் இருந்து 60,000 கன அடியாக குறைப்பு

அணைக்கு நீர்வரத்து 80,291 கன அடியிலிருந்து 65,000 கன அடியாக குறைந்தது

1:09 PM, 25 Jul

ஓபிஎஸ் பேட்டியால் நிர்மலா சீதாராமனுக்கு நெருக்கடி

பன்னீர்செல்வம் சகோதரருக்கு விமானப்படை ஹெலிகாப்டர் அனுப்பியது தவறு என கருத்து

நிர்மலா சீதாராமன் செயல்பாடுகள் பற்றி ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் அதிருப்தி

10:01 AM, 25 Jul

பி.இ. படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியுள்ளது. முதல் முறையாக ஆன்லைனில் நடைபெறுகிறது. 5 கட்டங்களாக ஆன்லைனில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.
9:44 AM, 25 Jul

பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு பதிவு தொடங்கியது

பொது தேர்தலில் மொத்தமுள்ள 272 தொகுதிகளில் 3,459 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்

நாடாளுமன்றம், மாகாண தேர்தலுக்காக 80 ஆயிரம் வாக்குச்சாவடிகள் தயார் நிலை

காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 6 மணிக்கு முடிவடையும்

இன்றைய தினமே வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது

நவாஸ் ஷெரீப் கட்சிக்கும் இம்ரான் கான் கட்சிக்கும் இடையே கடும் போட்டி

மாகாண தேர்தலில் 577 இடங்களுக்கு 8,000 பேர் போட்டி

9:44 AM, 25 Jul

டெல்லியில் நிர்மலா சீதாராமனை சந்திக்க சென்ற ஓபிஎஸ்ஸுக்கு நேரம் ஒதுக்கவில்லை. எனினும் மைத்ரேயன், சத்யபாமா உள்ளிட்ட எம்பிக்களுக்கு நேரம் ஒதுக்கிய நிர்மலா, ஓபிஎஸ்ஸை புறக்கணித்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. நிர்மலா சீதாராமன் அலுவலகத்தில் ஏராளமான நாற்காலிகள் காலியாக இருக்கும் போது ஓபிஎஸ்ஸுக்கு ஒரு இடம் கூடவா இல்லை என்று அவரது ஆதரவாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
9:43 AM, 25 Jul

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 74 பேரிடம் ரூ.3 கோடி மோசடி

சிதம்பரத்தை சேர்ந்த ஷோபியா கைது

வாங்கிய பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர் ஷோபியா

English summary
Pakistan's National Assembly and Provincial assembly election polling going on today and will be ended at 6 pm.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X