• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்கா- பாகிஸ்தான் இணைந்து வளர்த்த தீவிரவாத பாம்பு இன்று விஷம் கக்குகிறது!

By Veera Kumar
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானால் இரை போட்டு வளர்க்கப்பட்ட தீவிரவாதம் இன்று அவர்களையே பதம் பார்க்க தொடங்கியுள்ளது. அணுகுண்டு பாதுகாப்பை கொண்டுள்ள பாகிஸ்தானுக்கு இனிமேலும் தீவிரவாதிகள் உதவி தேவையில்லை. எனவே அவர்களை வேரோடு அழிக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இதுதான்.

Pakistan nurture snakes in its backyard

இந்தியா, ரஷ்யாவால் ஆபத்து

நாட்டின் சொத்து என்று போற்றப்பட்ட போராளி குழுக்கள் இன்று அந்த நாட்டின் எதிர்கால சொத்துக்களான குழந்தைகளையே அழிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளன. தீவிரவாதிகளை நாட்டின் சொத்தாக பாகிஸ்தான் கருதி ஊக்கம் கொடுத்ததற்கு காரணம் உண்டு. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்து சில ஆண்டுகளே ஆகியிருந்த நிலையில் அந்த நாட்டுக்கு இந்தியா, ஆப்கானிஸ்தான், ரஷ்யா போன்றவை ஆபத்தானவையாக கருதப்பட்டன.

இந்தியாவிடம் தொடர்ந்து தோற்ற பாகிஸ்தான்

அந்த சூழ்நிலையில் பாகிஸ்தானுக்கு வேறு வழி தெரியவில்லை. ராணுவ பலத்தில் பல மடங்கு வலிமையான நாடுகளான இந்தியாவும், ரஷ்யாவும் தங்கள் நாட்டை சுக்குநூறாக்க வெகுநேரம் பிடிக்காது என்ற பயம் பாகிஸ்தானுக்கு இருந்துவந்தது. 1971ம் ஆண்டில் இந்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசு, பாகிஸ்தானை இரண்டாக பிரித்து வங்கதேசத்தை உருவாக்கியது. இந்திய ராணுவத்திடம், பாகிஸ்தான் மண்டியிட்டது. எல்லை சண்டையிலும் பாகிஸ்தான் மண்ணையே கவ்வியது.

அமெரிக்கா-பாக். கூட்டு

1979ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில், சோவியத் யூனியன் ஊடுருவின. இந்த படைகள் பாகிஸ்தானையும் கபளீகரம் செய்யும் என்று அஞ்சிய பாகிஸ்தான், பணக்கார நாடான சவுதி அரேபியாவிடமும், வல்லரசான அமெரிக்காவிடமும் தஞ்சம் புகுந்தது. ராணுவத்தால் மட்டுமின்றி போராளி குழுக்கள் மூலமாகவும் ரஷ்யாவை தோற்கடிக்க களம் கண்டது பாகிஸ்தான். அப்போது 7 தீவிரவாத குழுக்கள் உருவாக்கப்பட்டன.

ரஷ்யாவை எதிர்க்க மத வெறி கருவி

"இந்த குழுக்கள் பாகிஸ்தான் நாட்டு மக்களிடையே இஸ்லாமை தீவிரவாக ஊட்டின. கடவுள் மறுப்பு கொள்கையும், கம்யூனிச சித்தாந்தமும் கொண்ட ரஷ்யாவிடம் பாகிஸ்தான் மக்கள் தஞ்சம் அடைவதை தவிர்க்கவும், ரஷ்யாவை எதிர்த்து மக்கள் ஆக்ரோஷமாக சண்டையிடவும், மத உணர்வு ஊட்டப்பட்டது" என கூறுகிறார் அமெரிக்காவுக்கான முன்னாள் பாகிஸ்தான் தூதர் ஹுசைன் ஹக்கானி. இவர் 'மசூதிக்கும் மிலிட்டரிக்கும் நடுவே நிற்கும் பாகிஸ்தான்' என்ற நூலின் ஆசிரியருமாவார்.

இந்தியாவுக்கு எதிராகவும் அதே சதி

மேலும் அவர் கூறுகையில், "தீவிரவாத குழுக்களுடன் பாகிஸ்தான் கைகோர்த்த நிலையில்தான் சோவியத் யூனியன் உடைபட்டு பல நாடுகளாக பிரிந்தது. இதனால் பாகிஸ்தானுக்கான அச்சுறுத்தல் நீங்கியது. ஆனால் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள் வளர்ச்சியடைந்துவிட்டனர். எனவே இந்த தீவிரவாத குழுக்களை இந்தியாவுக்கு எதிராகவும் பயன்படுத்தி இந்தியாவை உடைக்க திட்டமிட்டது பாகிஸ்தான். இங்குதான் தவறு ஆரம்பித்தது.

உள்நாட்டில் கவனம் வைக்கலாமே

சோவியத் யூனியன் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு விலகியபோதே தீவிரவாதிகளை ஒடுக்கும் வேலையில் பாகிஸ்தான் இறங்கியிருந்தால் இந்த பிராந்தியம் இப்போது அமைதி பூங்காவாக இருந்திருக்கும். பாகிஸ்தான் தற்போது அணுகுண்டு வைத்திருக்கும் ஒரு நாடாகும். எனவே இனிமேல் பிற நாட்டு படையெடுப்பு குறித்து அது அச்சப்படதேவையில்லை. எந்த ஒரு நாடும் அணு ஆயுதம் உள்ள நாட்டுக்குள் ஊருடுவப்போவது கிடையாது. தங்களை மிகவும் பாதுகாப்பானவர்களாக உணர வேண்டிய தருணத்தில் பாகிஸ்தான் உள்ளது. இனிமேல் பாகிஸ்தான் வெளியுறவை பற்றி கவலைப்படாமல் உள்நாட்டு மேம்பாட்டில்தான் கவனம் செலுத்த வேண்டும்.

எதற்கெடுத்தாலும் இந்தியாதான்

ஆனால் பாகிஸ்தானோ இன்னும் அச்ச உணர்வில் இருந்து மீண்டதாக தெரியவில்லை. எப்படியாவது இந்தியாவைவிட பலமான நாடாக தன்னை காண்பிக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறது. பாகிஸ்தானைவிட இந்தியா பரப்பளவில் ஆறு மடங்கு பெரிய நாடாகும். அதுமட்டுமின்றி பல்வேறு செல்வங்கள், வளங்களால் இந்தியா செழிப்பாக உள்ளது. எனவே எதற்கெடுத்தாலும் இந்தியாவுடன் ஒப்பிட்டு, பாகிஸ்தான் தன்னை தாழ்வாக கருத வேண்டியதில்லை" என்றும் ஹுசைன் தெரிவித்தார்.

ஹிலாரி எச்சரிக்கை

இதையேதான் அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும் முன்பு ஒருமுறை தெரிவித்தார். "உங்கள் கொல்லைப்புறத்தில் பாம்புகளை வளர்த்துக்கொண்டு நீங்கள் நிம்மதியாக இருக்க முடியாது" என்று.

வேரறுக்க நேரம் வந்துவிட்டது

அணு ஆயுத பலம் கொண்ட பாகிஸ்தான் இனியும் இந்தியாவுக்காக, தீவிரவாதிகளை நம்பிக்கொண்டிருக்க வேண்டியதில்லை,. தீவிரவாதிகளுக்கு மத வெறி ஊட்டப்பட்டு மதம் கொண்ட யானைகளாக உள்ளனர். எனவே அவர்கள் திருந்திவருவார்கள் என்று காத்திருக்கவும் வேண்டியதில்லை.

பாகிஸ்தானே மொத்தமாக தீவிரவாதிகளை அழிக்க முடியும். அப்படியும் இல்லாவிட்டால் அதன் நட்பு நாடுகள் உதவியுடன் தீவிரவாதத்தை வேரறுக்கும் பணியில் பாகிஸ்தான் இறங்க வேண்டும். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் தெற்காசிய மண்டலம் அமைதி பூங்காவாக பூத்துக் குலுங்கும்.

English summary
For decades, Pakistan’s generals have treated jihadi groups as assets to use against India. That policy didn’t protect their very own children.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X