• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புஷ்பத்தை புய்ப்பம் என்றாலும் நம்பலாம்.. பாகிஸ்தானை நம்பலாமா.. கொரோனா அங்கு புரியாத புதிர்!

|

இஸ்லாமாபாத்: கொரோனா வைரஸ் பாகிஸ்தானில் பரவ தொடங்கி ஆறு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், அந்த நாடு அப்போது தொற்றுநோய்களின் மோசமான நிலையைத் தழுவியதாகத் தெரிகிறது. மிகவும் நெரிசலான நகர்புற கட்டமைப்பு உடைய பாகிஸ்தானில் நிலைமை மோசமாகவே இருக்கிறது. அங்கு மருத்துவர்கள் இடைவிடாமல் 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறார்கள். மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிந்து வருகிறது.

தொற்று விகிதம் பாகிஸ்தானில் ஆரம்பத்தில் கிடுகிடுவென உயர்ந்து வந்த நிலையில் இப்போது சமீபத்திய வாரங்களில் தொற்றுநோய்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கொரோனா ஒவ்வொரு நாளும் ஒற்றை இலக்கங்களிலேயே இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அண்டை நாடான இந்தியாவில் தினமும் சுமார் ஆயிரம் பேர் வரை கொரோனாவால் பலியாகி வருகிறார்கள்.

போலியோ, காசநோய் மற்றும் ஹெபடைடிஸ் போன்ற எண்ணற்ற தொற்று நோய்களை தடுக்க முடியாமல் திணறி நீண்ட வரலாற்றை கொண்ட நாடு பாகிஸ்தான். அதை தடுக்க பாகிஸ்தான் அரசுகள் வழி தெரியாமல ஏராளமான நிதியை ஒதுக்கி இருக்கின்றன..

கோவா முதல்வர்... பிரமோத் சாவந்த்... கொரோனா தொற்று உறுதி!!

பாகிஸ்தான் வரலாறு அப்படி

பாகிஸ்தான் வரலாறு அப்படி

அப்படிப்பட்ட வரலாறு உடைய பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 296000 பேருக்குத்தான் இதுவரை பரவி உள்ளதாகவும், தொற்று எண்ணிக்கை 300கள் என்கிற அளவில் குறைந்து வருவதாவும் , உயிரிழப்பு ஒற்றை எண்ணிக்கையில் இருப்பதாகவும் கூறப்படுவது நம்பும்படியாக இல்லை.

பாகிஸ்தான் குடியிருப்புகள்

பாகிஸ்தான் குடியிருப்புகள்

ஏனெனில் பல பாகிஸ்தானியர்கள் நெரிசலான கட்டமைப்பில் உள்ள வீடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். பல தலைமுறைகள் ஒரே வீடுகளில் அல்லது குறுகலான அடுக்குமாடி வீடுகளில் வசித்து வருகிறார்கள். இவை எல்லாம் வைரஸ் பரவலுக்கு சாதகமான கட்டிடங்கள் ஆகும். இந்நிலையில் எப்படி தொற்று குறைந்தது என்பதை அங்குள்ள மருத்துவர்களாலேயே நம்ப முடியவில்லை.

விளக்கமே இல்லை

விளக்கமே இல்லை

"இந்த வீழ்ச்சியை யாராலும் விளக்க முடியவில்லை ... எங்களிடம் உறுதியான விளக்கம் எதுவும் இல்லை" என்று பாகிஸ்தானின் முக்கியமான கிழக்கு நகரமான லாகூரில் உள்ள சர்வீசஸ் மருத்துவமனையின் மருத்துவர் சல்மான் ஹசீப் கூறினார்.

முன்வைக்கும் வாதங்கள்

முன்வைக்கும் வாதங்கள்

ஆனால் பாகிஸ்தானியர்கள் தங்கள் நாட்டின் தொற்றுநோயை எதிர்த்து போராடும் திறன் இருப்பதாக ஏராளமான கருத்துக்களை முன்வைத்துள்ளனர், இளம் வயது மக்கள் தொகை அதிகம் மற்றும் வெப்பமான மற்றும் ஈரப்பதமான காலநிலை நிலவுவது. இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள நாடு என்று அடிக்கி கொண்டே செல்கின்றனர்.

46 பேரில் ஒருவர்

46 பேரில் ஒருவர்

பாகிஸ்தானில் அதிகாரப்பூர்வமாக இதுவரை 6300 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை என்று பார்த்தால் 29,6000 ஆக உள்ளது. இதை கணக்கிட்டு பார்த்தால் 46 பேரில் ஒருவர் உயிரிழந்து வருகிறார். பாகிஸ்தானில் குறைந்த அளவிலான சோதனையினால் மட்டுமே குறைவான தொற்று பாதிப்பு உள்ளதாக அறிக்கை வருகிறது. உண்மையான தொற்றுநோய்கள் கணிசமாக மிக மிக அதிகமாக இருக்கும் என்றும் சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். லாகூரில் ஒரு சோதனை மையத்தில் சோதித்த மக்கள் தொகையில் ஏழு சதவிகிதத்தினர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி இருந்தது நினைவுகூரத்தக்கது. சீனாவைப் போல் பாகிஸ்தானும் தொற்று பாதிப்பு எண்ணிக்கையை மறைப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Pakistan obfuscate health experts as coronavirus cases drop: Following an initial surge in novel coronavirus cases, the number of infections in Pakistan has plummeted in recent weeks, with Covid-19 deaths hovering in the single digits each day. Lahore doctor said that "No one has been able to explain this decline,".
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X