For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"ஒரே நெருப்பு.. மரண ஓலம்.. கொஞ்சமா வெளிச்சம் தெரிஞ்சது".. கராச்சி விபத்தில் தப்பியவர் பதைபதை பேட்டி!

பாகிஸ்தான் விமான விபத்தில் உயிர் பிழைத்தவர் பேட்டி அளித்துள்ளார்

Google Oneindia Tamil News

கராச்சி: "எங்க பார்த்தாலும் ஒரே நெருப்பு.. தீப்பிழம்பு.. சுற்றிலும் புகை.. கண்ணே தெரியல.. எல்லா பக்கமும் அலறல் சத்தம் கேட்டுட்டே இருந்தது.. என்னால யாரையும் பார்க்க முடியல.. என் சீட் பெல்ட்டை கழட்டினேன்.. கொஞ்சம் வெளிச்சம் மட்டும் தெரிந்தது.. அந்த வெளிச்சம் இருந்த திசையை பார்த்துட்டே நடந்துபோனேன்.. அங்கிருந்து 10 அடி கீழே குதிச்சுதான் உயிர் பிழைத்தேன்" என்று பாகிஸ்தான் விமான விபத்தில் தப்பி பிழைத்த பயணி அதிர்ச்சி விலகாமல் சொல்கிறார்.

Recommended Video

    Pakistan flight incident| பாகிஸ்தான் விமானி அனுப்பிய தகவல்.. விமான விபத்தின் பின்னணி

    லாகூரிலிருந்து 99 பயணிகளுடன் நேற்று ஒரு விமானம் புறப்பட்டது.. கராச்சியின் ஜின்னா ஏர்போர்ட்டுக்கு அருகில் சென்றபோது, தரையிறங்க முயன்றது.. அப்போதுதான் ஃபிளைட் மக்கர் செய்தது.

    அதனால் 2-வது முறையாக தரையிறங்க முயற்சித்தபோது, அங்கிருந்த ஒரு குடியிருப்பு பகுதியில் டமார் என மோதி வெடித்தது.. மொத்த பேருமே உடல் நசுங்கினாலும், 2 பேர் மட்டும் உயிர் பிழைத்துள்ளனர்.

    "ஒரே நெருப்பு.. மரண ஓலம்.. கொஞ்சமா வெளிச்சம் தெரிஞ்சது".. கராச்சி விபத்தில் தப்பியவர் பதைபதை பேட்டி!

    சடலங்கள்

    சடலங்கள்

    இந்த விமான விபத்தில் இதுவரைக்கும் 80-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆனால் அவர்கள் எல்லாம் இந்த ஃபிளைட்டில் இருந்த பயணிகள்தானா என்று தெரியவில்லை.. ஏனென்றால் குடியிருப்பு பகுதியில் அந்த ஃபிளைட் விழுந்ததில் வீடுகள் எல்லாம் இடிந்து சிதைந்துவிட்டன.

     ரணகளம்

    ரணகளம்

    இதெல்லாம் அந்த பகுதியில் ஒரு வீட்டு மொட்டையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தது..விபத்து நடந்த அந்த இடமே ரணகளமாக காட்சியளித்து.. இந்த வீடியோவை பார்த்து அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர்.. யார் யார் உயிரிழந்தார்கள் என்று விசாரணை நடந்து வருகிறது.. இவ்வளவு பயங்கரமான விபத்தில் 2 பேர் உயிர் பிழைத்துள்ளது அதிசயம்தான்.. அதில் ஒருவர் பெயர் முகமது சபைர்.. இவர் ஒரு என்ஜினியராம்.. கராச்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

     பறந்தபடி இருந்தது

    பறந்தபடி இருந்தது

    அப்போதுதான், ஒரு செய்தி நிறுவனத்திற்கு விபத்து நடந்தது குறித்தும், தான் எப்படி அந்த விபத்தில் இருந்து தப்பி பிழைத்தேன் என்றும் கலக்கத்துடனேயே பேட்டி தந்துள்ளார். அதில் அவர் சொல்லும்போது, "முதல்ல தரையிறங்க முயற்சிக்கும்போது, ஃபிளைட் தரையை தொட்டுவிட்டது.. ஆனால் திரும்பவும் மேலே வேகமாக பறந்துவிட்டது.. அப்படியே 10 நிமிஷம் பறந்தபடியே இருந்தபிறகு, திரும்பவும் பைலட் 2வது முறை கீழே இறக்க முயற்சித்தார்.. இதை அவர் அறிவிக்கவும் செய்தார்.. ஆனால் அதற்குள் மோதி விபத்து ஏற்பட்டுவிட்டது.

     தீப்பிழம்புகள்

    தீப்பிழம்புகள்

    ஒரு கணத்தில் எல்லாமே முடிந்துவிட்டது.. எங்கே பார்த்தாலும் புகைதான்.. நெருப்பு பற்றி கொண்டு எரிந்து கிடந்தது.. எல்லாருமே அலறினார்கள்... குழந்தைகள், பெரியவர்களின் அலறல் சத்தம் கேட்டு கொண்டே இருந்தது.. அவர்கள் கதறல் கேட்டதே தவிர, யார் முகத்தையும் பார்க்க முடியவில்லை..நான் 8-வது வரிசையில் உட்கார்ந்திருந்தேன்.

     உயிர் பிழைத்தேன்

    உயிர் பிழைத்தேன்

    என் சீட் பெல்ட்டை மெல்ல விடுவித்தேன்.. வெளிச்சம் வந்த திசையை பார்த்து கொண்டே சென்றேன்.. அப்புறம் அங்கிருந்து 10 அடி கீழே குதித்துவிட்டேன்.. இப்படிதான் நான் உயிர் பிழைத்தேன்" என்றார். ரம்ஜான் பண்டிகை நெருங்கும் சமயத்தில் இத்தனை பேர் உயிரிழந்த சம்பவம் பாகிஸ்தான் மக்களை நிலைகுலைய வைத்து வருகிறது.

    English summary
    pakistan plane crash: all i could see was smoke and fire, says survivor
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X