For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேடே, மேடே, மேடே.. விபத்துக்குள்ளான பாகிஸ்தான் விமான, பைலட்டின் கடைசி வார்த்தை- வைரலாகும் ஆடியோ

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் விமானம் நேற்று கீழே விழுந்து நொறுங்கும் முன்பாக, விமானி பேசிய, பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

Recommended Video

    Pakistan flight incident video | விமானி பேசிய ஆடியோ... விபத்துக்கு முன் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சி

    ஜின்னா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கராச்சியின் மாடல் காலனியில் நேற்று மாலை பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) பயணிகள் விமானம் 99 பேருடன் தரையில் விழுந்து நொறுங்கியது.

    விமான நிலையத்திற்கு 1 கி.மீ தூரம் கூட இல்லாத நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் 97 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சளி, இருமல் இருக்கு.. கொரோனா பரிசோதனைக்கு அனுப்பிவைங்க.. நீதிபதியிடம் ஆர் எஸ் பாரதி கோரிக்கைசளி, இருமல் இருக்கு.. கொரோனா பரிசோதனைக்கு அனுப்பிவைங்க.. நீதிபதியிடம் ஆர் எஸ் பாரதி கோரிக்கை

    மோதல்

    மோதல்

    பி.கே 8303 இல் ஏ 320 ஏர்பஸ் 91 பயணிகளையும், 8 பணியாளர்களையும் லாகூரிலிருந்து கராச்சிக்கு ஏற்றிச் சென்றபோதுதான் இந்த மோசமான விபத்தில் சிக்கியது. விமானம் முதலில் ஒரு மொபைல் கோபுரத்தைத் தாக்கி வீடுகளின் மீது மோதியுள்ளது. இதில், இரண்டு பயணிகள் தப்பிப்பிழைத்து மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    பைலட்கள்

    பைலட்கள்

    விமானத்தில் இயந்திர கோளாறு இருப்பது உறுதி செய்யப்பட்டதும், விமானத்தை தரையிறக்க விமானிகள் அஞ்சியுள்ளனர்.
    அப்போது விமான கண்காணிப்பு அமைப்பை, பைலட்கள் தொடர்பு கொண்டுள்ளனர். பைலட் ஒருவர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரிடம் பேசிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.

    இன்ஜின் கட்டுப்பாடு

    இன்ஜின் கட்டுப்பாடு

    "நாங்கள் இன்ஜின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டோம். மேடே, மேடே, மேடே" என்று கூறியுள்ளார். இதற்கு கட்டுப்பாட்டாளர் பதில் அளித்துள்ளார். இருவரது குரலிலும் பதற்றம் தெரியவில்லை. எப்படியாவது சரி செய்யலாம் என்றுதான் நினைத்திருக்க கூடும். அல்லது, இதுபோன்ற சூழ்நிலைகளை சமாளிக்க கொடுக்கப்பட்ட பயிற்சி காரணமாக பைலட் குரலில் பதற்றம் தெரியவில்லை.

    பரிதாபம்

    இந்த ஒலிப்பதிவு தற்போது வெளியாகியுள்ளது. இருப்பினும், இப்போது, அந்த பைலட் விபத்தில் இறந்துவிட்டார். இந்த குரல், சமூக வலைத்தளங்களில் பரவி, நெஞ்சை உருக்குவதாக உள்ளது. இந்த விமானம் முதலில் ஒரு மொபைல் கோபுரத்தைத் தாக்கி, மாடல் காலனிக்கு அருகிலுள்ள ஜின்னா கார்டன் பகுதியில் வீடுகள் மீது மோதியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட விமான போக்குவரத்தை, பாகிஸ்தான் கடந்த வாரம் மீண்டும் தொடங்கிய நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    English summary
    "We have lost Engines and may day", were the last Words from Pilot Flying PIA Plane From Lahore To Karachi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X