For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோசமடையும் காஷ்மீர் பிரச்சனை.. அமெரிக்காவின் உதவியை நாட பாகிஸ்தான் யோசனை.. இம்ரான் கான் பிளான்?

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் பெரும்பாலும் அமெரிக்காவின் உதவியை நாடுவதற்கு வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Trump-Imran khan Meet : டிரம்ப் -இம்ரான் சந்திப்புக்கு பிறகே காஷ்மீரில் இவ்வளவு மாற்றங்கள்-வீடியோ

    இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் பெரும்பாலும் அமெரிக்காவின் உதவியை நாடுவதற்கு வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இந்தியா அதிரடி நடவடிக்கை ஏதாவது எடுத்தால் கண்டிப்பாக பாகிஸ்தான் அமெரிக்காவின் உதவியை நாட வாய்ப்புள்ளது.

    காஷ்மீரில் தொடர்ந்து நிலைமை மோசம் அடைந்து வருகிறது. மொத்த மாநிலத்தையும் இந்திய ராணுவம் அப்படியே தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.

    காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக இன்று முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் காஷ்மீர் பிரச்சனையில் தற்போது பாகிஸ்தானும் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது.

    டிரம்ப் -இம்ரான் சந்திப்புக்கு பிறகே காஷ்மீரில் இவ்வளவு மாற்றங்கள்... அதிகரித்த பதற்றங்கள் டிரம்ப் -இம்ரான் சந்திப்புக்கு பிறகே காஷ்மீரில் இவ்வளவு மாற்றங்கள்... அதிகரித்த பதற்றங்கள்

    அமெரிக்கா

    அமெரிக்கா

    ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் ஏற்கனவே, தேவையான உதவிகளை செய்ய தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார். மோடி கூட என்னிடம் காஷ்மீர் பிரச்சனையில் உதவும்படி கேட்டார் என்று டிரம்ப் குறிப்பிட்டார். ஆனால் இதை இந்திய தரப்பு கடுமையாக மறுத்து வந்தது. மோடி டிரம்பிடம் உதவி கேட்கவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் அப்போதே அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த யோசனைக்கு ஆதரவு தெரிவித்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். அமெரிக்கா காஷ்மீர் பிரச்சனையில் பேச்சுவார்த்தை செய்தால் பிரச்சனை விரைவாக தீர வாய்ப்புள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையில் அது சுமூக தீர்வை கொண்டு வர வாய்ப்புள்ளது, என்று அவர் குறிப்பிட்டார்.

    என்ன உதவி

    என்ன உதவி

    இந்த நிலையில் தற்போது காஷ்மீரில் ராணுவம் குவிக்கப்பட்டு வருவதை அடுத்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவின் உதவியை நாடுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. பாகிஸ்தான் இந்த விஷயத்தில் தனியாக எதுவும் செய்ய முடியாது. அதனால் அமெரிக்காவின் உதவியை நாட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    கருத்து தெரிவித்தார்

    கருத்து தெரிவித்தார்

    ஏற்கனவே இது தொடர்பாக இம்ரான் கான் கருத்து தெரிவித்துள்ளார். அதில், காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க உதவுவதாக அதிபர் டிரம்ப் குறிப்பிட்டு இருந்தார் . இதுதான் அதற்கு சரியான நேரம். காஷ்மீரில் நிலைமை மோசமாகி வருகிறது. அங்கு இந்திய ராணுவம் அத்து மீறி வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Pakistan plans to seek USA help in Jammu Kashmir issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X