For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தானின் பணக்கார எம்.பி நவாஸ் ஷெரீப், பணக்கார முதல்வர் அவரது தம்பி!

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள சொத்து விவரங்களின் அடிப்படையில், மிகவும் பணக்கார எம்.பியாக அந்நாட்டு அதிபர் நவாஸ் ஷெரீப் திகழ்கிறார்.

கடந்த ஜூன் மாதம் நடந்த பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் நவாஸ் ஷெரீப் கட்சி வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து நவாஸ் செரீப் பாகிஸ்தானின் பிரதமராக பதவி ஏற்றார்.

இந்நிலையில் பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களின் சொத்து மதிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், தேர்தல் வேட்பு மனுவில் அவர்கள் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் குறிப்பிடப் பட்டுள்ளது.

அதன்படி எம்.பி.க்களில் மிகப்பெரும் பணக்காரராக பிரதமர் நவாஸ்செரீப் திகழ்வது தெரிய வந்துள்ளது.

நவாஸ் ஷெரீப்....

நவாஸ் ஷெரீப்....

நவாஸ் ஷெரீப் தன்னுடைய வேட்பு மனுவில் தனக்கு ரூ.182.4 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி 100 கோடி ரூபாய்க்கும் மேல் அவரது பெயரில் விவசாய நிலங்கள் உள்ளது தெரிய வந்துள்ளது. இவற்றில் சில லாகூரில் இவருக்கு பரம்பரையாகவும், பரிசாகவும் கொடுக்கப்பட்ட சொத்துக்களாகும். மனைவி பெயரில் முர்ரே பகுதியில் 2 சொத்துக்கள் உள்ளன.

மகன் வருமானத்தில்....

மகன் வருமானத்தில்....

இவைதவிர சர்க்கரை, ஜவுளி ஆலைகள் மற்றும் என்ஜினீயரிங் கம்பெனிகளில் நவாஸ்செரீப் முதலீடு செய்துள்ளார். இவருக்கு 2 டொயோபாலேண்ட் குரூசியர் கார், 2 மெர்சி பாய்ல் பென்ஸ்கார் மற்றும் டிராக்டர் ஒன்றும் உள்ளது. இவற்றில் லண்டனில் உள்ள இவரது மகன் உசேன் நவாஸ் வருமானத்தில் வாங்கப்பட்டுள்ள சொத்துக்களும் அடக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடீஸ்வரர்கள்....

கோடீஸ்வரர்கள்....

நவாஸ் ஷெரீப் தவிர பாகிஸ்தானின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் சாகித்கஹான் அப்பாசியும் கோடீசுவரர்கள் பட்டியலில் உள்ளார்.

இம்ரான்கான்...

இம்ரான்கான்...

கிரிக்கெட் முன்னாள் வீரரும், பாகிஸ்தான் தெக்ரிக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான்கானின் சொத்துமதிப்பு ரூ.2 கோடியே 90 லட்சம் என அந்த தகவலில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பணக்கார முதல்வர்....

பணக்கார முதல்வர்....

அதேபோல், பஞ்சாப் முதல்வருக்கு ரூ.4 கோடியே 40 லட்சம் சொத்து உள்ளது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் முதல்வர்களிலேயே மிகப்பெரும் பணக்காரர் என்ற தகுதியை ஷபாஸ் ஷெரீஃப் பெற்றுள்ளார். இவர் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் இளைய சகோதர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழை அரசியல்வாதி....

ஏழை அரசியல்வாதி....

இந்தக் கோடீஸ்வர அரசியல்வாதிகளுக்கு மத்தியில் சொத்து எதுவும் இல்லாத எம்.பி. ஆக ஜம்சத் தஸ்தி உள்ளார். சுயேச்சையான இவர் எம்.பி.க்குரிய சம்பளம் மட்டுமே பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Pakistani Prime Minister Nawaz Sharif is among the few parliamentarians who are billionaires, revealed statements of assets and liabilities of lawmakers for the year 2012-13 issued by the Election Commission of Pakistan (ECP).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X