For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாக்.கை கடைசியில் டுவிட்டரும் கைவிட்டுடுச்சு.. பாகிஸ்தான் அதிபருக்கு டுவிட்டர் அளித்த ஷாக்

Google Oneindia Tamil News

Recommended Video

    காஷ்மீரில் கட்டுக்குள் உள்ளதாக மோடி எண்ணுகிறார்: ட்ரம்ப் அதிரடி

    இஸ்லாமாபாத்: காஷ்மீர் குறித்து சர்ச்சைக்குரிய பதிவு வெளியிட்ட பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் அல்விக்கு டுவிட்டர் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்டு 5ம் தேதி ரத்து செய்தது. இதன் மூலம் நாட்டின் மற்ற பகுதிகளைப்போல் காஷ்மீரிலும் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற வரையறைக்குள் வந்துள்ளது. சிறப்பு அந்தஸ்து ரத்தால் இனி நாட்டின் மற்ற பகுதி மக்கள் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்க முடியும்.

    இந்நிலையில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை கண்டித்து இந்தியாவுக்கு எதிராக உலக நாடுகளின் ஆதரவைப் பெற முயன்ற பாகிஸ்தான் தீவிரமாக முயற்சித்தது.
    ஆனால் சீனாவை தவிர வேறு எந்த நாடும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தரவில்லை. அமெரிக்காவும் கைவிரித்துவிட்டது. சீனாவும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

    காஷ்மீர் குறித்து பதிவு

    காஷ்மீர் குறித்து பதிவு

    இந்நிலையில் காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடப்பதாக கடந்த திங்கள்கிழமை வீடியோ பதிவுடன் கூடிய சர்ச்சைச்குரிய டுவிட்டை பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் அல்வி வெளியிட்டு இருந்தார்.

    அதிபருக்கு நோட்டீஸ்

    அதிபருக்கு நோட்டீஸ்

    இந்த பதிவு அவதூறு பரப்பும் விதமாக அமைந்துள்ளதாக புகார் எழுந்ததால் டுவிட்டர் நிறுவனம், அதிபர் ஆரிஃப் அல்விக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

     மோசமான உதாரணம்

    மோசமான உதாரணம்

    அதிபருக்கு டுவிட்டர் நோட்டீஸ் அனுப்பி உள்ளதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வெளியிட்டுள்ள பாகிஸ்தானின் மனித உரிமைகள் அமைச்சர் சிரீன் மஸாரி, இது மோசமான உதாரணம் மற்றும் அபத்தமானது என கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    டுவிட்டர் அளித்த ஷாக்

    டுவிட்டர் அளித்த ஷாக்

    முன்னதாக பாகிஸ்தானின் தகவல் தொடர்பு அமைச்சர் முராத் சயீத், வெளியிட்ட டுவிட் பதிவு இந்திய சட்டங்களை மீறும் வகையில் இருப்பதாக ஞாயிற்றுக்கிழமை நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

    ஜம்மு காஷ்மீர் குறித்த கருத்து

    ஜம்மு காஷ்மீர் குறித்த கருத்து

    அண்மையில் ஜம்மு காஷ்மீர் குறித்து சர்ச்சைக் கருத்துக்களை தெரிவித்தாக பாகிஸ்தானை சேர்ந்த பலரின் டுவிட்டர் மற்றும் பேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

    English summary
    Pakistan President Arif Alvi received a notice from Twitter over his posts on Jammu and Kashmir. Pakistan's Human Rights Minister Shireen Mazari strongly oppese Twitter notice.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X