For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இம்ரான்கான் வெளியிட்ட திடீர் அறிவிப்பு.. கொதித்து போன இந்தியா.. பரபரப்பில் காஷ்மீர்!

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு-காஷ்மீரின் (pok) ஒரு பகுதியான கில்ஜித் பல்திஸ்தானுக்கு 'தற்காலிக மாகாண அந்தஸ்தை' வழங்குவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். கில்ஜித் பல்திஸ்தான் பகுதி இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பகுதியாகும்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்ப அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370, சட்டப்பிரிவு 35ஏ ஆகியவற்றை கடந்த ஆண்டு இந்தியா ரதது செய்தது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றி உத்தரவிட்டது. இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

அதேநேரம் பாகிஸ்தானோ, இந்தியாவின் காஷ்மீரல் இருந்து 1949ல் இருந்து ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதிகளை ஒரு பகுதியாகவும், கில்ஜித் பல்திஸ்தான் பகுதிகள் மத்திய கட்டுப்பாட்டிலுள்ள வடக்குப் பகுதி என்றும் பிரித்தது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு 1969இல் மத்திய கட்டுப்பாட்டிலுள்ள வடக்குப் பகுதிக்கு ஓர் ஆலோசனைக் குழுவை நியமித்தது.
1994இல் அந்த ஆலோசனைக் குழுவை வடக்குப் பகுதி கவுன்சில் என்று பெயர் மாற்றி இருந்தது.

ஹிஜ்புல் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத் தலைவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை! ஹிஜ்புல் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத் தலைவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்

1999இல் அதை வடக்குப் பகுதி சட்டப்பேரவையாக மாற்றியது. 2009இல் கில்ஜித் பலுதிஸ்தான் சட்டப்பேரவை என்று பெயர் மாற்றி, அதற்கு தன்னாட்சி உரிமையை வழங்கியது. 1927இல் காஷ்மீர் சமஸ்தானத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சட்டப்பிரிவு 35ஏ சேர்க்கப்பட்டது. அதை இப்போது தான் இந்திய அரசு அகற்றியிருக்கிறது. ஆனால், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரிலும், கில்ஜித் பல்திஸ்தான் பகுதிகளிலும் சரி 1927இல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு 1984இல் அகற்றப்பட்டது. அங்கே யார் வேண்டுமானாலும் குடியேறவும், சொத்துகள் வாங்கவும் பாகிஸ்தான் அரசு அப்போதே வலிகோயிலது... இதனால், பாகிஸ்தான் வசமிருக்கும் காஷ்மீர் பகுதி இப்போது முற்றிலும் மாறிவிட்டது.

இம்ரான்கான் அறிவிப்பு

இம்ரான்கான் அறிவிப்பு

எனினும் அந்த பகுதியில் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து அதிக அளவில் நடந்து வருகின்றன. அங்கு பாகிஸ்தான் அரசுக்கு எதிராக அடிக்கடி போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று பல்திஸ்தானில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், "ஒரு நாட்டின் இறையாண்மையையும் ஒற்றுமையையும் பாதுகாக்க ஒரு வலுவான இராணுவம் இன்றியமையாதது" என்றார். அத்துடன் கில்ஜித் பல்திஸ்தானுக்கு 'தற்காலிக மாகாண அந்தஸ்தை' வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இந்தியா கடும் எதிர்ப்பு

இந்தியா கடும் எதிர்ப்பு

டிசம்பர் மாதம் கில்ஜித் பல்சிஸ்தானில் தேர்தலை நடத்த போவதாக பாகிஸ்தான் அறிவித்த ஒரு சில நாளில் இப்படியான ஒரு அறிவிப்பு வந்துள்ளது. இந்த அறிவிப்புக்கு இந்தியாக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் "கில்ஜித் பல்திஸ்தான்" என்று அழைக்கப்படும் சட்டமன்றத்தில் தேர்தலை நடத்துவதன் மூலம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் சில பகுதிகளை பாகிஸ்தான் சட்டவிரோததமாக ஆக்கிரமித்ததை மறைக்க முடியாது என்றும் அங்கு உள்ள மக்கள் கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் சுரண்டலை சந்திப்பதாகவும் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியா கண்டிப்பு

இந்தியா கண்டிப்பு

வெளியுறவு அமைச்சம் வெளியிட்ட அறிவிப்பில். "நவம்பர் 15, 2020 அன்று நடைபெறவிருக்கும் கில்ஜித் பல்சிஸ்தான் சட்டமன்றத்திற்கு தேர்தல் அறிவிப்பு தொடர்பான அறிவிப்பை கடுமையாக கண்டிக்கிறோம் . இந்திய அரசின தனது வலுவான எதிர்ப்பை பாகிஸ்தான் அரசுக்கு தெரிவித்துள்ளோம். 1947 ஆம் ஆண்டில் கில்ஜித் மற்றும் பலுசிஸ்தான் அழைக்கப்படும் பகுதிகள் உட்பட ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பிராந்தியங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். பாகிஸ்தான் அரசாங்கத்தால் சட்டவிரோதமாகவும், வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் எதையும் அவர்கள் செய்ய உரிமை கிடையாது.

மறைக்க முடியாது

மறைக்க முடியாது

இதுபோன்ற நடவடிக்கைகளால் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு மற்றும் கடந்த 70 ஆண்டுகளாகபாகிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு கடுமையான மனித உரிமை மீறல்கள், சுரண்டல் மற்றும் சுதந்திரத்தை மறுப்பது போன்றவற்றை மறைக்க முடியாது. இப்போது செய்யப்படும் செயல்கள் எல்லாம் சட்டவிரோத ஆக்கிரமிப்பை மறைக்கும் நோக்கம் கொண்ட ஒப்பனை செயல்கள் ஆகும். எனவே பாகிஸ்தானை அதன் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் அனைத்து பகுதிகளையும் உடனடியாக காலி செய்யுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், " இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

English summary
pakistan Prime Minister Imran Khan on Sunday announced his government's decision to accord 'provisional provincial status' to Gilgit Baltistan,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X