For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீவிரவாதிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைதான் பாகிஸ்தான்.. ஐநாவில் இந்தியா சரமாரி குற்றச்சாட்டு!

சர்வதேச அளவில் தீவிரவாதிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை பாகிஸ்தான் என ஐநா அவைக் கூட்டத்தில் இந்தியா சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளது.

Google Oneindia Tamil News

ஜெனிவா: சர்வதேச அளவில் தீவிரவாதிகளை உற்பத்தி செய்யும் நாடுதான் பாகிஸ்தான் என ஐநா அவைக் கூட்டத்தில் இந்தியா சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளது.

ஐநா பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் அப்பாசி காஷ்மீர் பிரச்னையை எழுப்பினார். மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக தீவிரவாதத்தை இந்தியா தூண்டி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது, மேலும் பாகிஸ்தான் பிரதமரின் குற்றச்சாட்டுக்கும் இந்தியா தக்கபதிலடி கொடுத்துள்ளது.

இந்தியா சரமாரி குற்றச்சாட்டு

இந்தியா சரமாரி குற்றச்சாட்டு

ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் இந்திய தூதர் ஈனம் காம்பீர் பங்கேற்றார். பாகிஸ்தானின் குற்றச்சாட்டை மறுத்த அவர் அந்நாட்டின் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை கூறினார்.

பாகிஸ்தான் கூறுவதை ஏற்கமுடியாது

பாகிஸ்தான் கூறுவதை ஏற்கமுடியாது

அதாவது ஒசாமா பின்லேடனை பாதுகாத்தும், முல்லா ஒமருக்கு அடைக்கலம் கொடுத்ததும் பாகிஸ்தான். அப்படிப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டதாக கூறுவதை ஏற்க முடியாது என்றார்.

தீவிரவாதிகளை உற்பத்தி செய்யும் ஃபேக்டரி

தீவிரவாதிகளை உற்பத்தி செய்யும் ஃபேக்டரி

குறுகிய கால வரலாற்றில், புவியியல் அமைப்பில் தீவிரவாதத்துடன் பாகிஸ்தான் பெயர் பெற்றுள்ளது. சர்வதேச அளவில் தீரவாதிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக பாகிஸ்தான் உள்ளது. தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஏற்றுமதி செய்து வருகிறது என்றும் ஈனம் காம்பீர் சாடினார்

ஒற்றுமையயை சிதைக்க முடியாது

ஒற்றுமையயை சிதைக்க முடியாது

காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஈனம் காம்பீர் கூறினார். எந்தளவு எல்லைதாண்டிய தீவிரவாதத்தை பயன்படுத்தினாலும், இந்தியாவின் ஒற்றுமையை சிதைக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

பாகிஸ்தான் இனி டெரரிஸ்தான்

பாகிஸ்தான் இனி டெரரிஸ்தான்

பாகிஸ்தானை இனி டெரரிஸ்தான் என்று அழைக்கலாம் என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார். பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுதந்திரமாக சுற்றி வருவதாகவும் அவர் சாடினார். பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு முழு பாதுகாப்பையும் அளித்து வருவதாகவும் ஈனம் காம்பீர் குற்றம்சாட்டினார்.

விலையை கொடுத்து வருகிறது பாக்.

விலையை கொடுத்து வருகிறது பாக்.

உலகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள தீவிரவாதத்தை கைவிட பாகிஸ்தானுக்கு இன்னும் அறிவுரைகள் தேவைப்படுகிறது என்றும் அவர் கூறினார். தற்போது, தீவிரவாதத்திற்கான விலையை பாகிஸ்தான் கொடுத்து வருகிறது என்றும ஈனம் காம்பீர் குற்றம்சாட்டினார்.

English summary
Pakistan is now 'Terroristan', with a flourishing industry producing and exporting global terrorism: India at the UNGA. India said that It is extraordinary that the state which protected Osama Bin Laden should have the gumption to play the victim.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X