For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எல்லையில் பாக். படைகள்.. போர் வந்தாலும் ஒரு கை பார்ப்போம்.. எதற்கும் தயார்.. பாகிஸ்தான் ராணுவம்

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: காஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் இந்திய ராணுவத்தின் எந்தவொரு சவாலையும் ஏற்க தயாராக இருக்கிறோம் என அந்நாட்டு ராணுவ செய்தித் தொடர்பாளர் ஆசிப் கஃபூர் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்துக்கு வித்திடும் 370 சட்டப்பிரிவு அண்மையில் நீக்கப்பட்டது. மேலும் ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது.

இதற்கு பாகிஸ்தான், சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக பாகிஸ்தான், உலக நாடுகளை அணுகி, ரகசிய விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுத்தது. அது போல் ஐநா பாதுகாப்பு கவுன்சிலை பாகிஸ்தானும், சீனாவும் அணுகி ரகசிய விசாரணை நடத்த கோரியது.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

இந்த நிலையில் காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்விவகாரம் ஆகும். இதில் 3ஆவது நபர் தலையிடுவது கூடாது என தெரிவித்துவிட்டது. இதனால் பாகிஸ்தானின் முயற்சி தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இந்தியாவின் எந்த சவாலையும் சந்திக்க பாகிஸ்தான் தயாராக இருக்கிறது என பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது.

காஷ்மீர் சிறப்பு செல்

காஷ்மீர் சிறப்பு செல்

காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் வெளியுறவு துறை ஷாமுகமது குரோஷி ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை குறித்து அவர் கூறுகையில் பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் கூட்டத்தில் சிறப்பு காஷ்மீர் செல் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.

ஆலோசனை

ஆலோசனை

காஷ்மீர் பிரச்சினை உலக அளவில் கொண்டு செல்ல முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது. காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது என்றார். இந்த ஆலோசனை குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் ஆசிப் கஃபூர் செய்தியாளர்களை சந்தித்தார்.

கொந்தளிப்பு

கொந்தளிப்பு

அவர் கூறுகையில் காஷ்மீர் விவகாரத்தை திசைதிருப்ப பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. நாங்கள் அந்த தாக்குதலை சந்திக்க எல்லா வகையிலும் தயாராக இருக்கிறோம். முழு அளவில் தயாராக உள்ளோம். எல்லையில் போதுமான அளவுக்கு படைகளை நிறுத்தியுள்ளோம். காஷ்மீர் விவகாரம் இரு நாட்டிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தக் கூடிய பிரச்சினையாகும் என்றார்.

English summary
Pakistan Army spokesperson says that his army is fully prepared and ready to face India's any challenge.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X