For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உண்மைக்கும் கதைக்கும் வித்தியாசம் இருக்கிறது.. டொனால்டு டிரம்ப்பிற்கு பாக். பதிலடி!

தீவிரவாதத்திற்கு பாகிஸ்தான் ஊக்கம் அளிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதற்கு தற்போது பாகிஸ்தான் அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாகிஸ்தானிற்கு பதிலடி- வீடியோ

    வாஷிங்டன் : தீவிரவாதத்திற்கு பாகிஸ்தான் ஊக்கம் அளிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு வைத்து இருந்தார். அவரது இந்த 'புத்தாண்டு டிவிட்' உலகம் முழுக்க அதிர்ச்சியை கிளப்பியது.

    அமெரிக்கா இந்தியாவிற்கு நெருக்கமாக இருந்தாலும் பாகிஸ்தானிற்கும் நெருக்கமான நாடாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது திடீர் என்று பாகிஸ்தான் குறித்து அமெரிக்க அதிபர் இப்படி குறிப்பிட்டது அதிர்ச்சியாக இருந்தது.

    அது மட்டும் இல்லாமல் பாகிஸ்தான் குறித்து டிவிட்டரில் டிரம்ப் கொஞ்சம் கோபமாகவே எழுதி இருந்தார். இதற்கு தற்போது இந்தியாவும் பதில் அளித்துள்ளது.

    டிவிட்

    நேற்று டிரம்ப் போட்ட டிவிட்டில் ''பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடந்த 15 வருடமாக முட்டாள் போல உதவி இருக்கிறது. இதுவரை 33 பில்லியன் டாலர் அவர்களுக்கு கொடுத்து இருக்கிறோம். ஆனால் பதிலுக்கு பாகிஸ்தான் எங்களுக்கு பொய்யும், வஞ்சகமும் மட்டுமே கொடுத்துள்ளது. நாங்கள் கஷ்டப்பட்டு தேடும் தீவிவாதிகளுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பாக இடம் அளிக்கிறது'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

    பதில்

    இதற்கு பாகிஸ்தான் உடனடியாக பதில் அளிக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் வித்தியாசமான டிவிட் ஒன்றை செய்தது. அதில் ''இன்ஷா அல்லா விரைவில் நாங்கள் பாகிஸ்தானின் டிவிட்டிற்கு பதில் அளிப்போம். இந்த உலகத்திற்கு உண்மை என்ன என்று தெரிய வைப்போம். உண்மைக்கும், கதைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

     பதில் அளிக்க வேண்டும்

    பதில் அளிக்க வேண்டும்

    தற்போது பாகிஸ்தான் இந்த விஷயத்தில் செயலாற்ற தொடங்கி இருக்கிறது. அமெரிக்க அதிபரின் கருத்திற்கு விளக்கம் அளிக்க கோரி பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமெரிக்க தூதரகத்திற்கு சம்மன் அனுப்பி உள்ளது. பாகிஸ்தானில் இருக்கும் அமெரிக்க தூதரான டேவிட் ஹேலுக்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது. இந்த சம்மனுக்கு விரைவில் பதில் அளிக்கும்படி அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     இந்தியா பதில்

    இந்தியா பதில்

    தற்போது இந்த விஷயத்தில் இந்தியாவும் பதில் அளித்து இருக்கிறது. வடகிழக்கு பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக இருக்கும் ஜிதேந்திரா சிங் இதுகுறித்து அளித்த பதிலில் ''இந்தியா பாகிஸ்தான் மீது என்ன மாதிரியான நிலைப்பாடை எடுத்து இருக்கிறதோ அதே நிலைப்பாடை தற்போது அமெரிக்காவும் எடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பாகிஸ்தான் தீவிரவாதத்தை தூண்டி விடுவது உண்மைதான்''என்று அவர் கூறியுள்ளார்.

    English summary
    Pakistan replies to US President Donald Trump allegation on Pakistan. trump says in his tweet that, ''The United States has foolishly given Pakistan more than 33 billion dollars in aid over the last 15 years, and they have given us nothing but lies & deceit, thinking of our leaders as fools. They give safe haven to the terrorists we hunt in Afghanistan, with little help. No more!'', Pakistan summoned United States ambassador David Hale over this issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X