For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தான் பள்ளியில் இதயம் இந்தியா என்ற பாடல்… மூவர்ண கொடி… விளைவு.. உரிமம் ரத்து

Google Oneindia Tamil News

கராச்சி: கராச்சியில் பள்ளி விழா ஒன்றில் இந்திய பாடலுக்கு மாணவர்கள் நடனமாடியபோது, பின்னால் உள்ள திரையில் மூவர்ணக்கொடி ஒளிபரப்பியதற்காக அப்பள்ளியின் உரிமத்தை பாகிஸ்தான் ரத்து செய்தது.

பாகிஸ்தான் கராச்சியில் உள்ள பள்ளி ஒன்றில் பல்வேறு தேசியங்களின் கலாச்சாரம் என்ற பெயரில் விழா ஒன்று நடைபெற்றது. அந்த விழாவில் பள்ளிக்குழந்தைகள், பீர் பிஹில் தில் ஹை இந்துஸ்தானி என்ற இந்தியப் பாடலுக்கு நடனமாடினார்கள்.

Pakistan school’s registration suspended after students dance indian song, wave tricolour

பாடல் ஒலிப்பரப்பப்பட்ட போது இந்தியாவின் மூவர்ண கொடியும் பின்னால் உள்ள டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பப்பட்டது. இதையடுத்து அந்த பள்ளியின் உரிமத்தை பாகிஸ்தான் அரசு ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியை நடத்தியதற்காக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், பள்ளியின் நிறுவனர் மமா பேபி கேர் ஆகியோருக்கு இதுகுறித்து நோட்டீசையும் அந்நாட்டு அரசு அனுப்பி இருக்கிறது.

இதுகுறித்து அரசின் தனியார் நிறுவனங்களின் ஆய்வு மற்றும் பதிவு இயக்குநர் சிந்த் கூறுகையில், நமது தேசிய கண்ணியத்திற்கு எதிராக ஒரு பள்ளியில் சர்ச்சைக்குரிய பாடலை வெளியிடுவதை, எந்த சூழ்நிலையிலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.

English summary
Pakistani authorities have suspended the registration of a school in Karachi after some students danced to an Indian song and waved India’s national flag during a cultural event.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X