For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2008 மும்பை தாக்குதலில் தொடர்புடைய 3 தீவிரவாதிகளுக்கு சிறை தண்டனை விதித்த பாகிஸ்தான்!

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: 2008-ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக இந்தியாவும் அமெரிக்காவும் குற்றம்சாட்டிய ஜமாத் உத் தாவா எனும் தீவிரவாத அமைப்பின் தலைவர்கள் 3 பேருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

இந்த தண்டனையானது மும்பை தாக்குதலுக்கு மட்டும் அளிக்கப்படவில்லை. உலக நிதி கண்காணிப்பு பணிக்குழுவின் பயங்கரவாத நிதியுதவியை கட்டுப்படுத்த தவறியதற்காக பாகிஸ்தானை தடுப்புப் பட்டியலில் சேர்ப்பதை தடுக்க வரும் செப்டம்பர் மாதம் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

Pakistan sends 3 men to prison linked to 2008 Mumbai attacks

அந்த காலக்கெடுக்குள் இவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் இவர்களுக்கு சிறைத் தண்டனையை பாகிஸ்தான் நீதிமன்றம் வழங்கியது. பயங்கரவாத நிதியளித்தவர்கள் மீது வழக்குத் தொடரவும், பயங்கரவாத நிதியுதவிகளைக் கண்காணிக்கவும் நிறுத்தவும் உதவும் சட்டங்களை இயற்றவும் பாகிஸ்தானுக்கு கண்காணிப்புக் குழு அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பையில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அமெரிக்கர்கள் உள்பட பல்வேறு நாட்டினர் 160 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் இந்த தாக்குதலில் சம்பவத்தில் லஷ்கர் இ தொய்பா அமைப்பு அல்லது வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பிருப்பதாக இந்தியாவும் அமெரிக்காவும் குற்றம்சாட்டியது.

உலகிலேயே ஒரே நாளில் அதிக பலி, அதிக பாதிப்பு.. அமெரிக்கா, பிரேசிலை முந்தி இந்தியா முதலிடம் உலகிலேயே ஒரே நாளில் அதிக பலி, அதிக பாதிப்பு.. அமெரிக்கா, பிரேசிலை முந்தி இந்தியா முதலிடம்

இதையடுத்து ஜமாத் உத் தாவா அமைப்பைச் சேர்ந்த மாலிக் ஜாஃபர் இக்பால், அப்துல் சலாம், ஹஃபீஸ் அப்துல் ரஹ்மான் மக்கி ஆகியோருக்கு மும்பை தாக்குதலில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பான வழக்கு பாகிஸ்தான் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் 3 பேருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மாலிக் மற்றும் அப்துல் சலாமுக்கு 4 வழக்குகளின் கீழ் தலா 16.5 ஆண்டுகளும், ஹஃபீஸுக்கு ஒரு வழக்கின் கீழ் ஒன்றரை ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

லஷ்கர் இ தொய்பாவின் நிறுவனர் ஹஃபீஸ் சயீதின் கூட்டாளிகளான மேற்கண்ட 3 பேருக்கும் மொத்தம் 11 ஆண்டுகள் சிறை தண்டனை பிப்ரவரி மாதம் வழங்கப்பட்டது. தற்போது அவர்கள் மூவரும் மேலும் 5 ஆண்டுகள் தண்டனையை ஏக போகத்தில் அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

English summary
Pakistan court sentences 3 persons who are linked with terror groups in 2008 Mumbai attacks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X