For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேவையில்லாமல்.. அவசரப்பட்டு வார்த்தையை விட்ட பாக்.. கடும் கோபத்தில் சவுதி அரேபியா.. என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: சவுதி அரேபியா உடன் தேவையில்லாமல் சண்டை போட்ட பாகிஸ்தான் தற்போது பெரிய சிக்கலுக்கு உள்ளாகி உள்ளது. உலக அளவில் பாகிஸ்தானுக்கு இருந்த பெரிய ஆதரவு தற்போது இல்லாமல் போய் இருக்கிறது.

Recommended Video

    அவசரப்பட்ட Pakistan... கடும் கோபத்தில் இருக்கும் Saudi | Oneindia Tamil

    பாகிஸ்தானின் வெளியுறவு உறவுகள் தற்போது மோசமான சரிவை சந்திக்க தொடங்கி உள்ளது. பாகிஸ்தானுக்கு உலக அளவில் இருந்த உற்ற நண்பன் என்று பார்த்தால் அது சவுதியும், சீனாவும்தான். தற்போது அந்த சவுதியுடன் பாகிஸ்தான் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது.

    பாகிஸ்தான் மீது உலக நாடுகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கும், சர்வதேச எப்டிஏஎப் கமிட்டி பாகிஸ்தானை பிளாக் லிஸ்டில் சேர்க்காமல் இருப்பதற்கும் காரணம் என்று பார்த்தால் சவுதி அரேபியாதான். சவுதி தனது ராஜாங்க உறவை பயன்படுத்தி பாகிஸ்தானை பல இடங்களில் காப்பாற்றி இருக்கிறது.

    முடியாது என்றால் சொல்லிவிடுங்கள்.. விஸ்வரூபம் எடுத்த சவுதி- பாக் மோதல்.. ரியாத் விரைந்த ராணுவ மேஜர்முடியாது என்றால் சொல்லிவிடுங்கள்.. விஸ்வரூபம் எடுத்த சவுதி- பாக் மோதல்.. ரியாத் விரைந்த ராணுவ மேஜர்

    அமெரிக்கா எப்படி

    அமெரிக்கா எப்படி

    முக்கியமாக பாகிஸ்தான் மீது அமெரிக்கா பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு தடைகளை கொண்டு வர ஆலோசனை செய்த போதெல்லாம் சவுதி அரேபியாதான் பாகிஸ்தானுக்கு உதவியது. பாகிஸ்தான் - சீனா இடையே இருக்கும் நட்பு இப்போதும் கூட அமெரிக்காவிற்கு ஒரு வகையில் கோபத்தை உண்டாக்கியே வருகிறது. ஆனால் சவுதிதான் பாகிஸ்தானை காத்து வருகிறது. பாகிஸ்தான் நாட்டை உலக நாடுகள் உடன் இணைக்கும் பாலமாக தற்போது வரை சவுதி அரேபியா மட்டுமே செயல்பட்டு வருகிறது.

    பொருளாதாரம் உதவி

    பொருளாதாரம் உதவி

    அதோடு மிக மோசமான சரிந்து வரும் பாகிஸ்தான் பொருளாதாரத்தையும் சவுதி அரேபியாதான் தூக்கி நிறுத்தி வருகிறது. சவுதி அரேபியா மற்றும் சீனா கொண்டு வரும் திட்டங்களை கழித்துவிட்டு பார்த்தால் பாகிஸ்தான் பொருளாதாரம் பாதாளத்திற்கு சென்று விடும். பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் டாலர் வரை கடந்த 2 வருடங்களில் சவுதி அரேபியா உதவி செய்து உள்ளது. ஆனால் இப்படிப்பட்ட பணக்கார நண்பனிடம்தான்..அசோக்க்க்க்க்க் என்று சவால் விட்டு பாகிஸ்தான் கோபம் கொண்டுள்ளது.

    மிக மோசம்

    மிக மோசம்

    சென்ற வருடமே இந்த பிரச்சனை தொடங்கிவிட்டது. சென்ற வருடம் காஷ்மீர் பிரச்சனை குறித்து இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு சவுதி அரேபியா தலைமையில் ஆலோசனை செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் கோரிக்கை வைத்தது. ஆனால் சவுதி அரேபியா இதை கண்டுகொள்ளவில்லை. காஷ்மீரில் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டால் அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று சவுதி அரேபியா இந்தியாவிற்கு எதிராக காஷ்மீர் பிரச்சனையில் பெரிய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

    ஆனால் பாகிஸ்தான்

    ஆனால் பாகிஸ்தான்

    இதனால் கோபம் அடைந்த பாகிஸ்தான் தனியாக சவுதி அரேபியா இல்லாமலே இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கூட்டத்தை நடத்த முயன்றது. சவுதிக்கு இதை பார்த்துக் கொண்டு சும்மாவா இருக்கும்?... கூட்டம் நடக்க இரண்டு நாட்கள் இருந்த நிலையில் சவுதி அரேபியா வேகமாக உள்ளே புகுந்து பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தது. கூட்டத்தை நடத்த கூடாது என்று பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தது. இதனால் கடைசி நொடியில் இந்த கூட்டம் நின்று போனது.

    மீண்டும் அமைதி

    மீண்டும் அமைதி

    அதன்பின் அமைதியாக இருந்த பாகிஸ்தான் கடந்த மே மாதத்தில் இருந்து மீண்டும் சவுதி அரேபியாவை தொல்லை செய்து வந்தது. காஷ்மீர் குறித்து இஸ்லாமிய நாடுகள் ஒன்றாக பேச வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது. ஆனால் பாகிஸ்தானின் கோரிக்கையை சவுதி அரேபியா ஏனோ பொருட்டாக கூட மதிக்கவில்லை. இது பாகிஸ்தானுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

    மோசமான உறவு

    மோசமான உறவு

    இதுவரை எல்லாம் நன்றாக சென்று கொண்டு இருந்தது. அப்போதுதான் பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டது. அதில், சவுதி அரேபியா காஷ்மீர் குறித்து பேச தயங்குகிறது. சவுதி அரேபியா பேசவில்லை என்றால் நாங்கள் பேசுவோம். நாங்கள் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பை கூட்டி ஆலோசனை செய்வோம் . சவுதி அரேபியாயை நம்பி காஷ்மீர் பிரச்சனையை அணுக வேண்டிய அவசியம் கிடையாது என்று பாகிஸ்தான் கூறியது.

    கடும் கோபம்

    கடும் கோபம்

    பாகிஸ்தானின் இந்த திமிர்தனமான அறிக்கை சவுதி அரேபியாவை கடும் சீற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது. பாகிஸ்தான் அவசரப்பட்டு பேசிய விஷயம் சவுதி அரேபியாவை சீண்டி உள்ளது. இதனால்தான் பாகிஸ்தானுக்கு கொடுத்த 1 பில்லியன் கடனை சவுதி அரேபியா திருப்பி வாங்கியது. மேலும் 1 பில்லியன் கடனை சவுதி அரேபியா திரும்ப கேட்டுள்ளது. இன்னும் பல நடவடிக்கைகளை பாகிஸ்தானுக்கு எதிராக சவுதி அரேபியா எடுக்க உள்ளது.

    என்ன நடவடிக்கை

    என்ன நடவடிக்கை

    அதன்படி பாகிஸ்தானுடன் உறவை முறிக்கும் எண்ணத்தில் சவுதி அரேபியா இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். அதாவது இனி நட்பு நாடு எல்லாம் கிடையாது. வேறு வேறு இஸ்லாமிய நாடுகள் அவ்வளவுத்தான் என்று சவுதி அரேபியா பாகிஸ்தானை அணுக உள்ளது என்கிறார்கள். பிரதமர் இம்ரான் கான் சமாதானம் செய்ய முயன்றதும் தோல்வியில் முடிந்துள்ளது என்று கூறுகிறார்கள். அவரின் ராஜாங்க முயற்சி எல்லாம் தோற்றுவிட்டது என்கிறார்கள்.

    நடக்காது

    நடக்காது

    இதனால் தற்போது பாகிஸ்தான் மேஜரை அந்த நாடு சவுதிக்கு தூது செல்ல அனுப்பி உள்ளது. ஆனால் இது பெரிய வகையில் பலன் அளிக்காது. பாகிஸ்தான் - சவுதி அரேபியா உறவு தீர்க்க முடியாத நிலைக்கு சென்று விட்டது என்று கூறுகிறார்கள். இதனால் பாகிஸ்தானுக்கு தற்போது உதவி செய்யும் ஒரே நண்பனாக சீனா மட்டுமே இருக்கிறது. மிக மோசமான வெளியுறவுக் கொள்கை காரணமாக பாகிஸ்தான் பெரிய விலைகொடுத்துள்ளது.

    English summary
    Pakistan unwanted statements lead to dissociation with Saudi Arabia and other OIC nations .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X