For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மிரட்டும் வெட்டுக் கிளிகள்.. வளைத்துப் பிடித்து கோழிக்கு தீவனமாக்கும் விவசாயிகள்.. பலே பாகிஸ்தான்!

Google Oneindia Tamil News

கராச்சி: பாகிஸ்தான் விவசாயிகள் புத்திசாலித்தனமாக வெட்டுக்கிளிப் பிரச்சினையை கையாளுகிறார்கள். பயிர்களைக் காலி செய்ய படையெடுத்து வரும் வெட்டுக் கிளிகளை வலை வீசிப் பிடித்து தீவனமாக்கி அதை கோழிக்குப் போட்டு வருகின்றனராம்.

Recommended Video

    பாலைவன வெட்டுக்கிளிகள்- அதிரவைக்கும் தகவல்கள்

    25 வருடங்களில் இல்லாத அளவுக்கு வெட்டுக் கிளிப் பிரச்சினையை இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் சந்தித்துள்ளன. இந்தியாவில் பெரும் பாதிப்பை இந்த வெட்டுக் கிளி படையெடுப்பு ஏற்படுத்தியுள்ளது.

    குஜராத் உள்ளிட்ட மேற்கு மற்றும் வட இந்திய மாவட்டங்கள் வெட்டுக் கிளி படையெடுப்பால் கணிசமான பயிர்களை இழந்துள்ளன. இந்த நிலையில் பாகிஸ்தானில் இந்த பிரச்சினையை வேறு விதமாக கையாள ஆரம்பித்துள்ளனர் அங்குள்ள விவசாயிகள்.

    தென் இந்தியாவிற்கு பரவும் வெட்டுக்கிளி தாக்குதல் அபாயம்? கர்நாடகாவிற்கும் வார்னிங்.. பரபரப்பு தென் இந்தியாவிற்கு பரவும் வெட்டுக்கிளி தாக்குதல் அபாயம்? கர்நாடகாவிற்கும் வார்னிங்.. பரபரப்பு

    நூதன முயற்சி

    நூதன முயற்சி

    பாகிஸ்தானின் கிழக்கு மாகாணங்களில் தான் முதலில் வெட்டுக் கிளி படையெடுப்பு இருந்தது.. இந்த படையெடுப்பு வரும் நாட்களில் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மற்றும் ஜூலையில் மிகப் பெரியஅளவில் படையெடுப்பு இருக்கும் என்று பாகிஸ்தானின் சிந்து மாகாண பயிர்ப் பாதுகாப்பு துறையின் இயக்குநர் தாரிக் கான் எச்சரித்துள்ளார்.

    இரவில் வவ்வால் தாக்குதல்

    இரவில் வவ்வால் தாக்குதல்

    அதேசமயம், பாகிஸ்தானில் வெட்டுக்கிளிகள் மட்டுமல்லாமல் வவ்வால் தாக்குதலும் அதிகரித்துள்ளதாம். இரவில் வவ்வால்கள் மாந்தோப்புகளைக் குறி வைத்து மாங்காய்களை காலி செய்கிறதாம். பகலில்வெட்டுக் கிளிகள் தாக்குதல். இதனால் விவசாயிகள் நிலை குலைந்து போயுள்ளனர். இந்த நிலையில்தான் விவசாயிகள் வெட்டுக்கிளிகளை வித்தியாசமாக டீல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

    வெட்டுக்கிளியை வேட்டையாடும் விவசாயிகள்

    வெட்டுக்கிளியை வேட்டையாடும் விவசாயிகள்

    படையெடுத்து வந்து பயிர்களைக் கொத்தித் தின்னும் வெட்டுக் கிளிகளை வலையை வைத்து வளைத்து வளைத்துப் பிடிக்கின்றனர். பின்னர் அவற்றை உள்ளூர் கோழித் தீவன ஆலைகளுக்கு விற்கின்றனர். அங்கு அது கோழித் தீவனமாக மாற்றப்படுகிறது. இந்த வெட்டுக் கிளி தீவனத்தை பாகிஸ்தான் கோழிகள் சூப்பராக சாப்பிடுகின்றனவாம். பாகிஸ்தானின் ஓகரா மாவட்டத்தில் இதை அதிகாரிகள் சோதனை ரீதியாக செய்து பார்க்க ஆரம்பித்துள்ளனர். நல்ல ரிசல்ட் கிடைத்துள்ளதாம்.

    டேஸ்ட் நல்லாருக்குப்பா

    டேஸ்ட் நல்லாருக்குப்பா

    வெட்டுக் கிளிகளை இவர்கள் அப்படியே சாப்பிடக் கொடுப்பதில்லை. மாறாக அதை கால்நடைத் தீவன மில்களில் கொடுத்து தீவனமாக அரைத்து அதை கோழிகளுக்கு தீவனமாக போடுகின்றனர். வெட்டுக் கிளிகளில் நல்ல புரதச் சத்தும் நிரம்பியிருப்பதால் கோழிகளுக்கும் இது ஆரோக்கியமான தீவனமாக மாறியுள்ளது. இந்த ஐடியாவைக் கொடுத்தது ஓகாரா மாகாணத்தைச் சேர்ந்த அரசு அதிகாரி முகம்மது குர்ஷித் என்பவர்தான்.

    வெட்டுக்கிளி வறுவல் டேஸ்ட்டுய்யா!

    வெட்டுக்கிளி வறுவல் டேஸ்ட்டுய்யா!

    ஏமன் நாட்டில் இதுபோல கடந்த ஆண்டு செய்துள்ளனர். அதாவது வெட்டுக்கிளிகளைப் பிடித்து வறுத்து சாப்பிட ஆரம்பித்துள்ளனர். அது நல்ல சுவையுடனும், புரதச் சத்துடனும் இருந்ததால் வெட்டுக்கிளிகளை பிடித்து சமைத்து சாப்பிடுவதை ஏமன் மக்கள் செய்ய ஆரம்பித்தனர். இதனால் வெட்டுக் கிளிகளின் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பை ஓரளவு குறைக்க முடிந்திருக்கிறது. தற்போது அதை பாகிஸ்தானில் கோழித் தீவனமாக மாற்றி கலக்கி வருகின்றனர்.

    இரவில் பிடிச்சா சிக்கும்

    இரவில் பிடிச்சா சிக்கும்

    இந்த கோழித் தீவன திட்டத்தையும் கூட பக்காவாக பிளான் செய்து அமல்படுத்தியுள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகணத்தில்தான் இந்த ஓகாரமா மாவட்டம் வருகிறது. கிராமங்கள் நிறைந்த மாவட்டம் இது. எனவே இதைத் தேர்வு செய்து 3 நாள் சோதனை ரீதியாக இதை அமல்படுத்தினர். இங்கு வந்து குவிந்த வெட்டுக் கிளிகளைப் பிடித்து அதை கோழித் தீவன உற்பத்தி ஆலைகளுக்கு அனுப்பி வைத்து தீவனமாக மாற்றினர்.

    நல்ல துட்டு

    நல்ல துட்டு

    வெட்டுக் கிளிகளைப் பிடித்து வரும் விவசாயிகளுக்கு அதற்கேற்ற கூலியும் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு கிலோ வெட்டுக் கிளிக்கு பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 20 ரூபாய் தரப்படுகிறது. இதையடுத்து விவசாயிகளும் வெட்டுக் கிளிகளைப் பிடிக்க களம் இறங்கினர். பெருமளவில் வெட்டுக் கிளிகள் பிடிக்கப்பட்டதால் பயிர்கள் அழிவு பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளது. கூடவே கோழித் தீவனத்திற்கும் நல்ல மூலப் பொருளாக இந்த வெட்டுக் கிளிகள் கிடைத்து விட்டன.

    நைட் சைலன்ட் மோட்

    நைட் சைலன்ட் மோட்

    பகல் நேரத்தில்தான் வெட்டுக் கிளிகள் ஆக்டிவாக இருக்கும். இரவில் மரங்களில் அடைக்கலம் புகுந்து அசைவே இல்லாமல் அப்படியே காலை வரை தங்கியிருக்கும். அந்த சமயத்தில்தான் வெட்டுக்கிளிகளை பிடிக்க வேண்டுமாம். அதுதான் எளிதானதும் கூட. எனவே இரவெல்லாம் விவசாயிகள் வெட்டுக் கிளிகளை நோக்கி படையெடுக்க ஆரம்பித்து தற்போது அந்த ஊரில் வெட்டுக் கிளிகளின் எண்ணிக்கையை அடியோடு குறைத்து விட்டனராம்.

    ஒரே நைட்டில் ரூ. 20,000

    ஒரே நைட்டில் ரூ. 20,000

    ஒரு நாள் முழுவதும் வளைத்து வளைத்துப் பிடித்தால் ஏழு டன் வெட்டுக்கிளிகள் வரை பிடிக்க முடியுமாம். இதை விற்றால் ஒரு விவசாயிக்கு குறைந்தது ரூ. 20,000 வரை பணம் கிடைக்குமாம். பாகிஸ்தானில் இப்போது வெட்டுக் கிளி தீவணம் படு பிரபலமாகியுள்ளது. இந்தியாவிலும் கூட இதை அமல்படுத்தலாம். தீவனப் பற்றாக்குறையும் நீங்கும், கோழி உள்ளிட்ட விலங்குகளுக்கு ஆரோக்கியமான தீவனமும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். நாமும் வலையுடன் களம் இறங்குவோமா?

    English summary
    Pakistan villagers are using Locusts as Chicken feed.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X