For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எங்கள் கையில் எதுவும் இல்லை.. இம்ரான் கான் பயன்படுத்திய அந்த வார்த்தை.. இந்தியாவிற்கு வார்னிங்!

காஷ்மீர் பிரச்சனை குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அளித்த பேட்டி நிறைய சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: காஷ்மீர் பிரச்சனை குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அளித்த பேட்டி நிறைய சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரத்தை இந்தியா கடந்த சில வாரங்கள் முன்பு நீக்கியது. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே கசப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையிலான உறவு தற்போது நாளுக்கு நாள் பிரச்சனையாகிக் கொண்டே செல்கிறது. முக்கியமாக சர்வதேச தளத்திற்கு காஷ்மீர் பிரச்னையை பாகிஸ்தான் கொண்டு செல்ல முயன்று தோல்வி அடைந்துள்ளது. இந்த நிலையில் காஷ்மீர் பிரச்சனை குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேட்டி அளித்துள்ளார்.

பிரிவினை அரசியலை சங் பரிவார் கைவிட வேண்டும்.. இந்திக்கு எதிராக கொதித்தெழுந்த பினராயி விஜயன்!பிரிவினை அரசியலை சங் பரிவார் கைவிட வேண்டும்.. இந்திக்கு எதிராக கொதித்தெழுந்த பினராயி விஜயன்!

என்ன பேட்டி

என்ன பேட்டி

இந்த நிலையில் அல் ஜஸீரா செய்தி நிறுவனத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அளித்துள்ள பேட்டியில், நான் அமைதியை விரும்பும் நபர். பாகிஸ்தான் எப்போதும் எந்த நாட்டிற்கும் எதிராக போரை தொடங்காது. நான் அதில் உறுதியாக இருக்கிறேன். நான் போருக்கு எதிரானவன். போர் எந்த பிரச்சனையும் தீர்க்காது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் நாம் இப்போது இந்தியாவிற்கு எதிராக ஒரு வழக்கமான போரில் இருக்கிறோம். நாங்கள் சில விஷயங்ளில் தோல்வி அடைந்து கொண்டு இருக்கிறோம். ஒரு நாடாக நாங்கள் தோல்வியை விரும்ப வேண்டுமா, சாகும் வரை போராடி சுதந்திரத்தை விரும்ப வேண்டுமா என்றால் நாங்கள் சுதந்திரத்தைதான் விரும்புவோம்.

என்ன விருப்பம்

என்ன விருப்பம்

பாகிஸ்தான் மக்கள் தங்கள் சுதந்திரத்திற்காக இறுதி வரை, உயிர் போகும் வரை போராடுவார்கள். இரண்டு அணு ஆயுத சக்தி கொண்ட நாடுகள் இறுதி வரை போராட்டம் செய்தால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும். மிக மோசமாக இருக்கும்.

வெளியே செல்லும்

வெளியே செல்லும்

அதன் விளைவுகள் இந்தியாவிற்கு வெளியே செல்லும். உலக நாடுகளும் இதனால் பாதிக்கும். ஆனால் ஒரு நாகரீகமான நாட்டில் இருக்கிறோம் என்றால் நாம் பிரச்சனைகளை பேசி தீர்க்க வேண்டும். காஷ்மீர் பிரச்னையை நரேந்திர மோடி பேசி தீர்த்து இருக்க வேண்டும். ஆனால் அவர் பாகிஸ்தானை அழிக்க வேண்டும் என்று செயல்படுகிறார்.

பாகிஸ்தான் எப்படி

பாகிஸ்தான் எப்படி

பாகிஸ்தானை பேரழிவை நோக்கி செல்ல வேண்டும் என்று அவர் அழுத்துகிறார். பொருளாதார ரீதியாகவும் அவர் பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படுகிறார். நாங்கள் போரை தொடங்க மாட்டோம். இரண்டு நாடுகளும் அணு ஆயுதங்கள் கொண்ட நாடு. அது பெரிய ஆபத்தாக முடியும்.

இப்படியே இருக்க மாட்டோம்

இப்படியே இருக்க மாட்டோம்

நாங்கள் போரை தொடங்க மட்டோம். ஆனால் எங்கள் பாதுகாப்பிற்கு எதிரான விஷயங்கள் நடந்தால் நாங்கள் இப்படியே இருக்க மாட்டோம். எங்கள் கையில் எதுவும் கிடையாது. உலக நாடுகள் இந்தியாவின் அணு ஆயுத நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும், என்று இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Pakistan won't remain oblivious to the challenges posed to its security says Imran Khan on War against India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X