For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போதையில் விமானம் ஓட்ட முயன்ற பாக். விமானி: 9 மாதம் சிறை தண்டனை விதித்த இங்கிலாந்து கோர்ட்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

லண்டன்: போதையில் தள்ளாடியபடி விமானம் ஓட்ட முயன்ற பாகிஸ்தான் விமானிக்கு 9 மாத சிறை தண்டனை விதித்து இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 18ம் தேதி இங்கிலாந்தின் யார்க்னஷர் நகர் அருகேயுள்ள லீட்ஸ் பிராட்போர்ட் விமான நிலையத்தில் இருந்து 145 பயணிகள் மற்றும் 11 விமான ஊழியர்களுடன் பாகிஸ்தானுக்கு சொந்தமான சர்வதேச விமானம் ஒன்று இஸ்லாமாபாத் நகருக்கு புறப்பட தயாராக இருந்தது.

அந்த விமானத்தை ஓட்ட இருந்த இர்பான் பய்ஸ் (55) என்ற விமானி நிற்க கூட நிதானம் இல்லாத போதையுடன் இருந்ததாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது.

விரைந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போது அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேலே 3 மடங்கு போதையில் அவர் இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு தொடர்ந்தனர்.

விமானத்தில் ஏறுவதற்கு 19 மணி நேரத்திற்கு முன்னதாக முக்கால் பாட்டில் விஸ்கி குடித்ததாகவும் பாகிஸ்தான் நாட்டு சட்டப்படி குடித்த 12 மணி நேரத்திற்கு பின்னர் விமானம் ஓட்டலாம் என்றும் இர்பான் பய்ஸ் சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடினார்.

இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த லீட்ஸ் கிரவுன் கோர்ட் நீதிபதி பீட்டர் கால்சன், 'பலமுறை சர்வதேச விமானத்தை ஓட்டியுள்ள ஒரு விமானி போதை தொடர்பான இங்கிலாந்து நாட்டின் சட்டங்களை பற்றி தனக்கு தெரியாது என்று கூறுவது வியப்பாக உள்ளது.

இது மிக தீவிரமான குற்றம். சாதாரணமாகவே விமானங்களில் பயணிக்கும் மக்கள் உயிர் பயத்துடன் தான் செல்கின்றனர். ஊழியர்கள் தடுத்திருக்காவிட்டால் அந்த விமானத்தை ஓட்டிச்சென்று 156 பேரின் உயிருக்கும் இவர் ஆபத்து விளைவித்திருப்பார்.

எனவே, குற்றவாளிக்கு 9 மாத சிறை தண்டனை விதிக்கிறேன்' என்று தீர்ப்பளித்தார்.

English summary
An airline pilot has been jailed for nine months for being drunk in his cockpit before a flight.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X