For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தானில் தங்கத்துக்கு ஈடாகும் தக்காளி.. தக்காளிகளால் நகை அணிந்த மணப்பெண்..

Google Oneindia Tamil News

Recommended Video

    பாகிஸ்தானில் தங்கத்துக்கு ஈடாகும் தக்காளி.. தக்காளிகளால் நகை அணிந்த மணப்பெண்

    இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தக்காளி விலை கிடுகிடு என உயர்ந்து வரும் நிலையில் அந்நாட்டின் பொருளாதாரத்தை கிண்டல் செய்யும் விதமாக தக்காளிகளால் செய்யப்பட்ட நகையை அணிந்திருந்தார்.

    ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டவுடன் இந்தியா மீது பாகிஸ்தான் பொருளாதார தடை விதித்தது. இந்த நிலையில் இந்தியா, ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து தக்காளி இறக்குமதிக்கு பாகிஸ்தான் தடை செய்துள்ளது.

    இதனால் பாகிஸ்தானில் தக்காளியின் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ . 300-ஐ தாண்டியது. சமையலுக்கு மிகவும் அத்தியாவசிய பொருளான தக்காளியின் விலை உயர்வால் அங்குள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபோல் ஹோட்டல்களிலும் தக்காளியின் பயன்பாடு குறைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதே போல் வெங்காயத்தின் விலையும் கிலோ ரூ 90 முதல் ரூ 100 வரை விற்பனையாகிறது.

    ஊடகங்கள்

    ஊடகங்கள்

    தக்காளி இருக்கும் குடோன்களை சிலர் திருடும் நிலைக்கு சென்றுவிட்டனர். இதனால் பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் தக்காளி வைத்திருக்கும் குடோன்களுக்கு காவலாளிகளை சம்பளம் கொடுத்து நியமித்துள்ளதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    தக்காளி

    தக்காளி

    இந்த நிலையில் பாகிஸ்தானில் மணப்பெண் ஒருவர் அந்நாட்டு பொருளாதாரத்தை கிண்டல் செய்யும் நோக்கிலும் தக்காளி விலை குறித்த கவனத்தை ஈர்க்கவும் தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கழுத்துக்கு அணியும் நெக்லேஸ், நெத்தியில் வைக்கும் நெத்திச்சுட்டி, தோடு உள்ளிட்டவற்றை தக்காளியை அணிந்திருந்தார்.

    அதிக விலைக்கு விற்பனை

    அதிக விலைக்கு விற்பனை

    இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதற்காக மணப்பெண் வீட்டார் 3 பாக்ஸ் தக்காளிகளை வாங்கியுள்ளனர். இதுகுறித்து மணப்பெண் கூறுகையில் தங்கம் விலை உயர்ந்த ஒன்றாகும். அது போல் தக்காளிகளும் பைன் கொட்டைகளும் மிகவும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

    பாடாய்படுத்தும் விலை

    ஒரு பெண்ணின் பெற்றோர் தக்காளிகளை வாங்கித் தர முடிந்தால் போதும் அவர்கள் அந்த பெண்ணுக்கு தங்கம், வைரத்தையும் வாங்கித் தரும் சக்தி அவர்களுக்கு உண்டு என்பதை புரிந்து கொள்ளலாம். அந்தளவுக்கு தக்காளி விலை பாடாய்படுத்துகிறது என்றார்.

    English summary
    Pakistani bride wears jewels made of Tomato to take attention of government about skyrocketing price of them.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X