For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அசிங்கம்.. அவமானம்.. கோட் சூட் போட்ட ஒரு அதிகாரி செய்யற வேலையா இது?

குவைத் அதிகாரியின் பர்ஸை பாக். அதிகாரி திருடி உள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    அசிங்கம்.. அவமானம்.. கோட் சூட் போட்ட ஒரு அதிகாரி செய்யற வேலையா இது?-வீடியோ

    இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் மானம் தறிகெட்டு உலகமெங்கும் காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. இவ்வளவு நாள் கெத்து காட்டி வந்த பாகிஸ்தான் ஒரு கேவலமான செயலால் தலைகுனிந்து கூனி குறுகி போய் உள்ளது.

    இஸ்லாமாபாத்தில் 2 நாளுக்கு முன்னாடி அரசு முதலீடு திட்டங்கள் குறித்த ஒரு கூட்டம் நடந்திருக்கிறது. இது ஒரு முக்கியமான கூட்டம். அதனால் குவைத் நாட்டிலுள்ள அதிகாரிகளை கலந்து கொள்ளுமாறு பாகிஸ்தான் அரசு வேண்டி வேண்டி கூப்பிட்டது. இதனால் ஒப்புக் கொண்ட குவைத் நாட்டின் நிதித்துறை அதிகாரிகளும் அந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

    டேபிள் மேல் பர்ஸ்

    டேபிள் மேல் பர்ஸ்

    இரு நாட்டு நிதி அமைச்சகத்தின் அதிகாரிகள் கலந்து கொள்ள ஆலோசனை கூட்டம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. இரு நாட்டு அதிகாரிகளும் நிறைய பேசினர்கள். அப்போது இவர்களுக்கு வெளிப்புறத்தில் விருந்து ரெடி ஆனது. அதனால் கூட்டத்திலிருந்து கிளம்பி விருந்து சாப்பிட எல்லோரும் சென்றார்கள். அப்போது கூட்டத்தில் தான் உட்கார்ந்த இடத்திலேயே ஒரு குவைத் நாட்டு அதிகாரி தன் பர்ஸை டேபிள் மேலே வைத்துவிட்டு மறந்துபோய் சாப்பிட வந்துவிட்டார்.

    கோட்-சூட் அதிகாரி

    கோட்-சூட் அதிகாரி

    சாப்பிட எல்லோரும் வந்துவிடவும், கூட்டம் நடந்த இடமே காலியாக இருந்தது. ஆனால் டேபிள் மேல இருந்த ஒரே ஒரு பர்ஸை மீட்டிங்கில் பங்கேற்ற பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் பார்த்துவிட்டார். இவர் அந்நாட்டின் நிதிஅமைச்சகத்தின் முதலீடு வாரியத்தின் செயலாளர் அந்தஸ்தில் உள்ளவர். அவரது பெயர் ஜரார் ஹைதர் கான். கோட்-சூப் போட்ட அந்த அதிகாரி, பார்த்ததும் சுற்றி முற்றி பார்த்தார். ஒருத்தரும் நம்மை கவனிக்கவில்லை, கண்டுக்கவில்லை என்று உறுதி செய்து கொண்டார்.

    என் பர்ஸை பாத்தீங்களா

    என் பர்ஸை பாத்தீங்களா

    அடுத்த சில வினாடிகளில் அந்த பர்ஸ் அபேஸ் செய்து கொண்டார். அதாவது திருடிக் கொண்டு தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு வேக வேகமாக சாப்பிடுவதற்கு நடையை கட்டினார். கொஞ்ச நேரத்தில் சாப்பிட்டு விட்டு திரும்பிய குவைத் அதிகாரி, பர்ஸை காணாமல் தேடினார். அங்கிருந்தவர்களிடம் எல்லாம் சென்று "என் பர்ஸை பார்த்தீங்களா" என்று கேட்டுக் கொண்டே இருந்தார். எங்கியுமே பர்ஸ் கிடைக்கவேயில்லை. அங்கிருந்தவர்களும் பர்ஸை கூட்டம் நடந்த இடம் எல்லா இடத்திலும் தேடி தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இப்படி இரு நாட்டு அதிகாரிகளும் பர்ஸை தேடுவதை அந்த அபேஸ் அதிகாரியும் வேடிக்கை பார்த்து கொண்டுதான் நின்றார்.

    திருட்டு முழி

    திருட்டு முழி

    அதனால் கடைசியாக போலீசில் அதிகாரப்பூர்வமாக பர்ஸ் காணாமல் போய்விட்டது என்று புகார் கொடுக்கப்பட்டது. அப்போதுததான் பாதுகாப்பு படையினருடன் போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள். சிசிடிவி காமிராக்கள் பக்கம் கவனம் திரும்பியது. உடனடியாக அங்கிருந்த காமிராக்களை ஆய்வு செய்தனர். அப்போதுதான் பாக். அதிகாரி யாராவது நம்மை பார்க்கிறார்களா என்பதை பார்த்து கொண்டும், திருட்டு முழி முழித்துக் கொண்டும் பர்ஸை திருடிக் கொண்டு நடையை கட்டியதும் தெரியவந்தது.

    வைரல் வீடியோ

    உடனடியாக அந்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்... கைது செய்யப்பட்டார்... போலீசார் இதுகுறித்து விசாரித்தும் வருகின்றனர். அதிகாரியின் இந்த திருட்டு காட்சிதான் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி நாறி வருகிறது. நெட்டிசன்கள் கிழி கிழியென்று அந்த அதிகாரியை கிழித்து வருகிறார்கள்,. இந்த வைரல் போதாதென்று பாகிஸ்தானின் டான் பத்திரிகையிலேயே வெளிவந்து அந்த நாட்டு மானத்தை வாங்கி கொண்டிருக்கிறது.

    இம்ரான்கான் மானம்

    இம்ரான்கான் மானம்

    இப்போதெல்லாம் ஒரு சாதாரண பெட்டி கடை உள்ளிட்ட சந்துபொந்துகளில்கூட சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. இப்படி இருக்கும்போது ஒரு அரசு கூட்டத்தில், அதுவும் வேறு நாட்டு அதிகாரிகள் கலந்து கொள்ளும் கூட்டத்தில் சிசிடிவி கேமராக்கள் இருக்கும் என்பது கூடவா ஒரு அதிகாரிக்கு தெரியாமல் போனது என்பது ஆச்ரியமாக இருக்கிறது. பாகிஸ்தானில் இப்படிப்பட்ட "அறிவாளிகளை" அதிகார பொறுப்பில் உட்கார வைத்தால் காற்றில் சேர்ந்து பறப்பது இம்ரான்கானின் மானமும்தான்!!

    English summary
    Pakistani Bureaucrat steals Kuwaiti delegates Wallet claims
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X