For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துபாயில் தேனிலவு: இந்திய தம்பதியின் அந்தரங்கத்தை வீடியோ எடுத்து மிரட்டிய பாக். டிரைவர்

By Siva
Google Oneindia Tamil News

துபாய்: துபாய்க்கு தேனிலவுக்கு சென்ற இந்திய தம்பதி லிமோசின் காரில் மிகவும் நெருக்கமாக இருந்ததை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டிய பாகிஸ்தானை சேர்ந்த டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவை சேர்ந்த தம்பதி தேனிலவுக்காக துபாய்க்கு சென்றனர். துபாயில் அவர்கள் லிமோசின் காரை வாடகைக்கு எடுத்து ஊரை சுற்றிப் பார்த்தனர். காரை பாகிஸ்தானை சேர்ந்த 28 வயது வாலிபர் ஒருவர் ஓட்டினார்.

Pakistani Man Arrested For Filming Indian Couple Honeymooning In Dubai

காரில் இருக்கையில் அந்த தம்பதி மிகவும் நெருங்கி உணர்ச்சிவசப்பட்டுவிட்டனர். இதை டிரைவர் தனது செல்போனில் வீடியோ எடுத்தார். அந்த வீடியோவை கணவருக்கு அனுப்பி வைத்து ரூ.36 ஆயிரத்து 500 பணம் அல்லது உங்கள் மனைவியை என்னிடம் அனுப்ப வேண்டும் இல்லை என்றால் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டினார்.

இது குறித்து அந்த நபர் போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் டிரைவரை பிடித்து விசாரித்தபோது தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

4 நாட்கள் தேனிலவுக்கு துபாய்க்கு சென்ற அந்த தம்பதி அங்கு நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்தனர்.

English summary
A Pakistani driver has been arrested and charged in a court in Dubai for blackmailing an Indian couple after secretly filming them getting intimate in his limousine while honeymooning in Dubai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X