ஆளில்லா விமான தாக்குதலை நிறுத்த ஒபாமாவிடம் நவாஸ் ஷெரீப் கோரிக்கை!
வாஷிங்டன்: பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் ஆளில்லா உளவு விமானம் மூலமான வான் தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வலியுறுத்தியுள்ளார்.
2011ஆம் ஆண்டு அல்கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த போது அமெரிக்க ராணுவம் அதிரடியாக அவரை சுட்டு வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா- பாகிஸ்தான் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
பின்னர் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் ஆளில்லா விமானங்கள் மூலம் தலிபான் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினரும் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் நவாஸ் ஷெரீப்
இந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அதிபர் ஒபாமாவை இன்று சந்தித்தார். ஒபாமாவுடனான சந்திப்பின் போது எல்லைப் பகுதியில் தொடர்ந்து அமெரிக்கா மேற்கொண்டு வரும் வான் வழி தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று நவாஸ் ஷெரீப் வலியுறுத்தினார்.

ஒபாமா ஒப்புதல்
இதை ஏற்றுக் கொண்ட ஒபாமாவும், இருநாடுகளிடையே சில நேரங்களில் தவறான புரிதல்கள் ஏற்பட்டுவிடுகிறது என்று கூறியதுடன் பாகிஸ்தானின் இறையான்மையை மதிப்பதாகவும், பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவோம் என்றும் கூறியுள்ளார்.

கூட்டறிக்கை
பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், அண்டை நாடுகளுக்கு எதிரான தீவிரவாத செயல்களுக்கு எந்த நாடும் தங்கள் மண்ணில் இடம் அளிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீவிரவாதம் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மனித உலகத்துக்கு எதிராக உருவாகி வருவதாக கவலை தெரிவிக்கப்பட்டது.

ஒபாமா கருத்து
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, இரு நாடுகள் இடையே பாதுகாப்பு, வன்முறை, தீவிரவாதம் ஆகியவை பற்றி ஆலோசனை நடத்தினோம். இரு நாடுகளுக்கு இடையேயான உறவை பலப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

வான்வழி தாக்குதலை நிறுத்த வலியுறுத்தல்
இதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் எல்லையில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் வான்வழி தாக்குதல்களை நிறுத்த தாம் வலியுறுத்தினேன் என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications