For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை டிவியில் ஒளிபரப்ப தடை - பாக். உச்சநீதிமன்றம் உத்தரவு

பாகிஸ்தான் சேனல்களில் இந்திய படங்களை ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: இந்திய நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை ஒளிபரப்ப பாகிஸ்தானின் உள்நாட்டு ஊடகங்களுக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்திய திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை பாகிஸ்தான் சேனல்களில் ஒளிபரப்புவது குறித்து அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி சகிப் நிசார் முன்னிலையில் நடைபெற்றது.

pakistans supreme court bans indian content- on tv

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இந்தியாவின் சேனல்களுக்கு தடை விதித்தால் என்ன? என கேள்வி எழுப்பினார். மேலும், அப்போது நீதிபதி சகிப் நிஸார், பாகிஸ்தான் அணை கட்டுவதற்கு இந்தியா ஆட்சேபம் கூறுகிறது. ஆதலால் இந்திய திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப பாகிஸ்தானின் உள்நாட்டு ஊடகங்களில் ஒளிபரப்ப தடை விதித்து அவர் உத்தரவிட்டார்.

இதற்கு முன்னர் இதேபோல், கடந்த 2016ம் ஆண்டு பாகிஸ்தான் ரேடியோ மற்றும் சேனல்கலில் இந்திய நிகழ்ச்சிகள் மற்றும் படங்களுக்கு அந்நாட்டு மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்திருந்தது. பின்னர் அது, 2017ம் ஆண்டு விலக்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.

English summary
Pakistan's Supreme Court on Saturday reinstated a ban on airing Indian content on TV channels in the country, overturning the Lahore High Court's 2017 order.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X