For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மொசாட்டிற்கு வந்த எச்சரிக்கை.. காஸாவை தாக்கிய 200 இஸ்ரேல் ராக்கெட்டுகள்.. பற்றி எரியும் பாலஸ்தீனம்!

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரண்டு நாடுகளும் மாறி மாறி ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    இஸ்ரேல் நடத்திய தாக்குதல் .. காஸா போராளி குழு தலைவர் கொலை!

    ஜெருசலேம்: இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரண்டு நாடுகளும் மாறி மாறி ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் காஸா மீண்டும் போர் பூமியாக மாறியுள்ளது.

    பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே பல வருடங்களாக அறிவிக்கப்படாத போர் நடந்து வருகிறது. பாலத்தீனம் மீது இஸ்ரேல் செய்து வரும் ஆக்கிரமிப்பிற்கு எதிராக பாலஸ்தீன போராளி குழுக்கள் போர் செய்து வருகிறது. காஸாவில்தான் இந்த போர் நடந்து வருகிறது.

    காஸா பாலஸ்தீனத்திற்கு சொந்தமான மாகாணங்களில் ஒன்றாகும். இங்குதான் பாலஸ்தீன போராளி குழுக்கள் இருக்கிறார்கள்.

     அவர்தான் முக்கிய புள்ளி.. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பயங்கரம்.. காஸாவின் போராளி குழு தலைவர் கொலை! அவர்தான் முக்கிய புள்ளி.. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பயங்கரம்.. காஸாவின் போராளி குழு தலைவர் கொலை!

    கொலை செய்யப்பட்டார்

    கொலை செய்யப்பட்டார்

    நேற்று இந்த போர் பெரிதானனது. இஸ்ரேல் உளவு நிறுவனமான மொசாட்டிற்கு வந்த உளவுத்தகவல் ஒன்றுதான் நேற்று பிரச்சனை பெரிதாக காரணம் என்கிறார்கள். அதன்படி இஸ்ரேல் மீது பாலஸ்தீன போராளி குழுக்கள் தாக்குதல் நடத்த உள்ளது. ஹமாஸ் போராளி குழுக்கள் உள்ளிட்ட குழுக்கள் தாக்குதல் நடத்த உள்ளது.

    குகைகள் வருகிறது

    குகைகள் வருகிறது

    இஸ்ரேலின் முக்கிய நகரத்திற்கு செல்லும் வகையில் அவர்கள் காஸாவிலிருந்து குகை அமைத்து உள்ளனர். இந்த குகை வழியாக ஹமாஸ் உள்ளிட்ட போராளி குழுக்கள் இஸ்ரேல் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்த உள்ளனர் என்று மொசாட் எச்சரித்துள்ளது. இதனால் உஷாரான இஸ்ரேல் பாதுகாப்பு படை காஸா மீது கடுமையாக தாக்குதல் நடத்தியது.

    மாலை

    மாலை

    நேற்று மாலையில் இருந்து காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று மற்றும் சுமார் 200 ராக்கெட்டுகளை ஏவி காஸா மீதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் பல 100 பேர் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் இஸ்ரேலின் தரைப்படையும் மிக கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது.

    யார் மீது குறி

    யார் மீது குறி

    காஸாவில் இருக்கும் பாலஸ்தீன போர் படைகளில் ஒன்றான பாலஸ்தீன் இஸ்லாமிக் ஜிஹாத் (பிஐஏ) அமைப்பைதான் இஸ்ரேல் அதிகமாக குறி வைத்தது. இந்த தாக்குதலில் காஸா பிஐஏ குழுவின் தலைவர் பாஹா அபு அல் அதா கொலை செய்யப்பட்டார். இதனால் காஸா தற்போது கலவர பூமியாக மாறியுள்ளது.

    மோசம்

    மோசம்

    பிஐஏ குழுவின் தலைவர் பாஹா அபு அல் அதா கொல்லப்பட்டதால் தற்போது காஸா போராளி குழுக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் மீது நேற்று இரவு மட்டும் 180 ராக்கெட்டுகளை காஸா போராளி குழுக்கள் வீசி இருக்கிறது. இதில் 10க்கும் மேற்பட்ட இஸ்ரேல் பொதுமக்கள் பலியாகி இருக்கிறார்கள்.

    தடுத்து நிறுத்தியது

    தடுத்து நிறுத்தியது

    காஸா போராளி குழுக்கள் வீசிய ராக்கெட்டுகளை இஸ்ரேலின் ராக்கெட் எதிர்ப்பு மிசைல்கள் தடுத்து நிறுத்தி அழித்தது. இதனால் இஸ்ரேலில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் அங்கு தற்போது அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    English summary
    Palestinians attack Israel after the PIJ chief Bahaa Abu al-Ata killed yesterday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X