சட்ட விரோத சொத்துப் பதுக்கல்: 3.68 லட்சம் பேரின் பெயர்களை வெளியிட்டது பனாமா பேப்பர்ஸ்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: பல்வேறு நாடுகளின் அதிபர்கள், அவர்களின் உறவினர்கள், பிரபலங்கள் வரி ஏய்ப்பு செய்து சட்ட விரோதமாக பதுக்கிய சொத்துகள் விவரங்களை பனாமா பேப்பர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

மத்திய அமெரிக்க நாடான பனாமா நாட்டைச் சேர்ந்த மொசாக் ஃபொன்சேகா என்ற சட்ட நிறுவனத்தின் உதவியுடன், உலகின் பல்வேறு நாடுகளில் ஏராளமான பிரபலங்கள் சொத்துகளை வாங்கிப் பதுக்கி உள்ளனர்.

பல்வேறு நிறுவனங்களின் பணப் பரிவர்த்தனைகள், வர்த்தகத் தொடர்புகள், ரகசிய வங்கிக் கணக்குகள் ஆகியவை தொடர்பான ஆவணங்கள் அந்த சட்ட நிறுவனத்திடம் உள்ளன.

Panama Papers: 3.68 lakhs names behind offshore accounts released

பனாமா நிறுவனத்தின் கைவசம் இருந்த இந்த ஆவணங்களில் சில பகுதிகளை ரகசியமாக, ‘பனாமா பேப்பர்ஸ்' என்ற பெயரில் கடந்த ஏப்ரல் மாதம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பினர் வெளியிட்டனர். இந்திய பிரபலங்கள் சிலரது ஆவணங்களும் இவற்றில் இடம்பெற்றிருந்தன.

பணம் பதுக்கியவர்களில் மன்னர்கள், முன்னாள், இந்நாள் பிரதமர்கள், ஹாலிவுட் நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள் என பலரும் அடங்குவர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு நாட்டு தலைவர்கள் தங்களது பதவியை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்த நிலையில், பனாமா ஆவணங்களில் இடம் பெற்றுள்ள மேலும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெயர்களை தங்களது offshoreleaks.icij.org வலைதளத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு வெளியிட்டுள்ளனர். மொத்தம், ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட 3 லட்சத்து 68 ஆயிரம் பேரின் பெயர்கள் இந்த இணையதளத்தில் தற்போது காணக்கிடைக்கின்றன. இவர்கள் சொத்து தொடர்பாக 11.5 மில்லியன் ஆவணங்களும் உள்ளன. இவற்றை தரவிறக்கிக் கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது.

ரஷ்யா, பாகிஸ்தான், அஜர்பைஜான், சீனா, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அரசியல் தலைவர்கள், அவர்களின் வாரிசுகள் பதுக்கியுள்ள பல ஆயிரம் கோடி சொத்துக்கள் விவரங்கள் இந்த ஆவணங்களில் அடங்கியுள்ளன.

Panama Papers: 3.68 lakhs names behind offshore accounts released

ஐஸ்வர்யா ராய்

இந்த பனாமா பேப்பர்ஸ் லிஸ்டில் இந்தியாவின் பெயர் இல்லை. ஆனாலும் இந்தியப் பிரபலங்கள் சிலரது பெயர்கள் உள்ளன. ஐஸ்வர்யா ராயின் பெயரும் இந்தப் பட்டியலில் உள்ளது. பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகளில் உள்ள அமிக் பார்ட்னர்ஸ் என்ற நிறுவனத்தில் 2004-ம் ஆண்டு முதலீடு செய்துள்ளார். ஆனால் இவரது முதலீடு 2009-ல் ரத்தாகிவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+