For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாண்டா கரடி கசமுசா செய்ததை 'லைவ்' செய்த பிரபல டிவி சேனல்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

பீஜிங்: பாண்டா கரடிகள் உறவு கொள்வதை சீனாவை சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனம் நேரடி ஒளிபரப்பு செய்துள்ளது.

சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிசுவான் பகுதியிலுள்ளது யான் நகரம். இங்கு பிபேன்ஜியா பாண்டா மையம் என்ற பெயரில் பாண்டா கரடி பராமரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது.

Pandas shun mating in China's live broadcast

பொதுவாக பாண்டா கரடிகள், மார்ச் முதல் மே மாதம் வரையில் தங்கள் இணையுடன், இனப்பெருக்கத்தில் ஈடுபடும். எனவே, ஆண்-பெண் பாண்டா கரடிகளை இனப்பெருக்கத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர், அந்த பராமரிப்பு மைய ஊழியர்கள்.

இதேபபோலத்தான் ஆண் கரடியான லின் பிங் மற்றும் பெண் கரடி ஊ ஹாங் ஆகியவற்றை இனப்பெருக்கம் செய்ய வைத்தனர் ஊழியர்கள். ஆனால் இதை சீன நெட்வொர்க் சேனலின் ஐபாண்டா சேனல் நேரடியாக ஒளிபரப்பி ஊருக்கே காட்டிவிட்டது.

பொதுவாக கரடிகள் உறவு காட்சிகள் படம்பிடிக்கப்பட்டது மிக அபூர்வம். எனவே, இதை நேரடியாக காண்பிக்க முடிவு செய்ததாக அந்த டிவி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த உறவு சுமார் 50 நிமிட நேரம் நடந்துள்ளது. முதலில் ஆண் கரடி முரண்டு பிடித்ததாகவும், பிறகு கொஞ்சம், கொஞ்சமாக இனப்பெருக்கம் நடத்தியதாகவும் டிவி சேனல் பார்த்தவர்கள் விவரிக்கின்றனர்.

English summary
Two endangered pandas failed to mate in a matchmaking arranged for the first live broadcasting of the process by a Chinese TV network for the global audiences.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X