For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

40 ஆண்டுகளுக்கு முன்பு "மிஸ்" ஆன பார்சல்.... போஸ்ட் ஆபிசை சுத்தம் செய்த போது கிடைத்தது!

Google Oneindia Tamil News

மெல்போர்ன்: தபால் அலுவலகத்தை சுத்தம் செய்த போது கிடைத்த பார்சல் ஒன்றை, சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின் உரியவரிடம் ஒப்படைத்து தன் கடமையை செவ்வணே செய்துள்ளது ஆஸ்திரேலிய தபால்துறை.

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு தபால் அலுவலகம், சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டது. அதற்காக அலுவலகத்தில் இருந்த பொருட்கள் அகற்றப் பட்டன. அப்போது இயந்திரம் ஒன்றின் பின்னால் ஒரு பார்சல் கிடப்பது கண்டுபிடிக்கப் பட்டது.

Parcel delivered in Australia 40 years after it was first sent

அதிலிருந்த முகவரி மற்றும் அஞ்சலகக் குறியீட்டை பார்த்த போது, அது 40 ஆண்டுகளுக்கு முன், அப்பகுதியில் உள்ள டென்னிஸ் கிளப் ஒன்றிற்காக அனுப்பப் பட்டது என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, அந்த பார்சலில் இருந்த முகவரியில் அந்த பார்சல் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து அந்த கிளப்பின் முன்னாள் உறுப்பினர் ஐரின் கேரெட் கூறுகையில், "கடந்த 1975ல், டென்னிஸ் கிளப்புக்கு தேவையான ஒரு பொருள் ஆர்டர் செய்யப்பட்டது. அது, 40 ஆண்டுகளுக்கு பின் எங்களுக்கு கிடைத்துள்ளது. நாங்களே மறந்துவிட்ட அந்த பொருளை, தபால் துறை ஊழியர்கள் தற்போது ஒப்படைத்துள்ளனர்" என்றார்.

நாற்பது ஆண்டுகளாகியும் பார்சலின் மீதிருந்த பெயர் மற்றும் முகவரி அழியாமல் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
An oily, tattered parcel has been delivered in Melbourne, Australia, 40 years after it was first sent. Viewbank Tennis Club received a package containing retro embroidered uniform patches, which the club believes were ordered at some point in the 1970s.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X