For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அழுத குழந்தையை தரையில் வீசி கொன்ற பணிப்பெண்- தமிழக தம்பதி கைது!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

parents’ worst nightmare – a babysitter who kills their child
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒன்றரை வயது குழந்தையை தரையில் வீசி கொலை செய்துள்ளார் பணிப்பெண் ஒருவர். குழந்தையின் இந்த நிலைக்கு பெற்றோர்களின் அஜாக்கிரதைதான் காரணம் என்று கூறி அவர்களைக் கைது செய்துள்ளனர் அமெரிக்கப் போலீசார்.

அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் மாகாணம் நியூ ஹெவன் என்ற இடத்தில் வசித்து வருபவர் சிவகுமார் (33). அவரது மனைவி தேன்மொழி (24). தமிழகத்தைச் சேர்ந்த இவர்களது 19 மாத குழந்தை ஆதியன்.

பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதால், கிஞ்ஜல் படேல் (27) என்ற பெண்ணை குழந்தையை கவனித்துக்கொள்ள அமர்த்தி இருந்தனர். அவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தான்.

வீட்டில் குழந்தையை கவனித்துக்கொண்டிருந்த கிஞ்ஜல் படேல் கடந்த 16ந் தேதி, குழந்தையின் அழுகையை நிறுத்த முடியாமல் ஆத்திரமடைந்தார். அடித்து பார்த்தார். மேலும் அழவே குழந்தையை தரையில் வேகமாக வீசினார். இதில் குழந்தையின் தலை தரையில் மோதி பலத்த காயம் ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் குழந்தை வீரிட்டு அழுதது. தலையில் இருந்து ரத்தம் வழியவே, பயந்து போன படேல், சிவகுமாருக்கு போன் மூலம் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

பதறியடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்த சிவகுமார், குழந்தையை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.

இந்த வழக்கில் கிஞ்ஜல் படேலை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் குழந்தையை தரையில் வீசி தாக்கியதை ஒப்புக்கொண்டார். கொலை நடந்த வீட்டையும் போலீசார் பூட்டுபோட்டு சீல் வைத்தனர்.

இந்தநிலையில் தேன்மொழி, சிவக்குமார் ஆகிய இருவரையும் போலீசார் இந்த வழக்கில் கைது செய்தனர். குழந்தைக்கு பலத்த காயம் ஏற்படும் அளவுக்கு அஜாக்கிரதையாக இருந்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

English summary
Kinjal Patel, a 27 year-old babysitter in Connecticut, has been charged with first-degree manslaughter and risk of injury to a child after a 19 month-old child in her care got injured, and later died.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X