For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போலீஸ்.. போலீஸ்.. சத்தத்தை கேட்டதும்.. போலீஸ்காரர்களே அரண்டு போனார்கள்.. ஏன்?

போதை கும்பலுக்கு உதவி செய்து பச்சைக்கிளி தப்பிக்க வைத்துள்ளது.

Google Oneindia Tamil News

பிரேசிலியா: போலீஸ்.. போலீஸ்.. என்ற திடீர் சத்தத்தை கேட்டதும்.. போலீஸ்காரர்களே அரண்டு போய் விட்டார்கள்.. ஏன்? எதற்காக?

பிரேசிலில் பியாயு மாகாணத்தில்தான் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. குரூப் போதைப்பொருளை கடத்தும் தொழிலை செய்து வந்திருக்கிறார்கள். அவர்கள் எமகாதகர்களாம்.. போலீசுக்கு ரொம்ப காலமாகவே டிமிக்கு தந்து வந்திருக்கிறார்கள். இதனால் அவர்களை பிடிப்பது போலீசுக்கு பெரிய சவாலாம்!

அப்படியே பொறி வைத்து இந்த கும்பலை போலீசார் பிடிக்க வந்தாலும் எப்படியாவது கண்ணில் மண்ணை தூவி எஸ்கேப் ஆகிவிடுவார்களாம்! எப்படி, யார் இவர்களுக்கு தகவல் தந்து தப்புகிறார்கள் என போலீசார் மண்டையை குடைந்து கொண்டார்கள்.

கடல்லயே இல்லையாம்.. மெரினா பீச் சென்ற பொது மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! கடல்லயே இல்லையாம்.. மெரினா பீச் சென்ற பொது மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

போலீஸ்.. போலீஸ்..

போலீஸ்.. போலீஸ்..

அதனால் இந்த முறை கடத்தல் கும்பலை பிடித்துவிட வேண்டும் என்று போலீஸ்கார்கள் ஒரு முடிவெடுத்து விட்டார்கள். அதனால் கடத்தல்காரர்கள் இருந்த இடத்தை சுற்றி வளைத்து அந்த இடத்தின் உள்ளே நுழைந்தும் விட்டார்கள். ஆனால் திடீரென்று ஒரு சத்தம்.."போலீஸ்.. போலீஸ்.." என்று!

கேடி ஓனர்கள்

கேடி ஓனர்கள்

குரல் வித்தியாசமாக இருக்கவும் சுற்றுமுற்றும் பார்த்தால், அங்கிருந்த கிளிதான் கத்தியது. கிளி சத்தம் போட்டதும், கேடி ஓனர்கள் திரும்பவும் எஸ்கேப்! இப்படி அலர்ட் செய்வதற்காகவே அந்த கும்பல் கிளியை வளர்த்திருக்கிறார்களாம்.

நொந்து போனார்கள்

நொந்து போனார்கள்

உடனடியாக அந்த கிளியை ஸ்டேஷனுக்கு தூக்கி சென்றார்கள் போலீசார். கிளியிடம் விசாரணை ஆரம்பமானது. என்னன்னமோ கேள்வி கேட்டார்கள், எப்படி எப்படியோ பேசிப் பார்த்தார்கள்.. ஆனால் கிளி வாயே திறக்கவில்லை. இதனால் போலீசார் ரொம்பவே நொந்து போய் டயர்ட் ஆகிவிட்டார்கள்.

கிளிக்கு சிறை

கிளிக்கு சிறை

இதனால் குற்றவாளிகளை தப்பவிட்ட கிளியை ஜெயிலில் போட்டார்கள்.. அதாவது உள்ளூர் விலங்கு காட்சி சாலையில் கொண்டு போய்விட்டு விட்டார்கள். 3 மாசத்துக்கு அப்பறம்தான் கிளிக்கு ரிலீஸாம்.. ஏனென்றால் அந்த கிளிக்கு பறக்கவே தெரியாதாம். போலீஸ் என்ற வார்த்தையை தவிர வேறு எதுவும் சொல்லி தரவும் காணோம். அதனால் முதலில் பறப்பதற்கு பயிற்சி தரப்பட்டு, அதற்கு பிறகு பறக்கவிடப்படும் என சொல்லப்படுகிறது.

English summary
In Brazil, Parrot ceazed and arrested for alerting its drug dealing owners of police Raid
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X