For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாற்று திறனாளி என்று உதவ போனால் இப்படியா நடப்பது.. பெண்ணிடம் வரம்பு மீறிய தைவான் பயணி!

விமானத்தில் பணிப் பெண்ணிடம் மாற்றுத் திறனாளி தவறாக நடக்க முயன்றார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    விமானப் பணிப்பெண்ணிடம் வரம்பு மீறிய தைவான் பயணி-வீடியோ

    லாஸ்ஏஞ்சல்ஸ்: உடல் ஊனம் என்பதை ஒரு சாதகமாக வைத்துக் கொண்டு தைவான் விமான பயணி செய்த காரியம் அனைவரையும் கொதிக்க வைத்துள்ளது.

    தைவானின் ஈவிஏ என்ற ஏர் விமானம், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து டக்கு தைவானுக்கு சென்றுள்ளது. அந்த விமானத்தில் பெண் ஊழியர்கள் மட்டுமே இருப்பார்கள்.

    இந்த நிலையில் விமானத்தில் பயணித்த ஒரு மாற்று திறனாளி பயணி பாத்ரூம் போக வேண்டும், உதவிக்கு ஆண் பணியாளர்கள் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

    சக்கர நாற்காலி

    சக்கர நாற்காலி

    அதற்கு ஒரு பணிப்பெண், "இங்க ஆண்கள் யாரும் இல்லை.. எல்லாரும் பெண்கள்தான் இருக்கிறோம். நானே உங்களுக்கு உதவுகிறேன்" என்று சொன்னார். மாற்று திறனாளி என்பதால், சக்கர நாற்காலியை தள்ளி விட வேண்டி இருக்கும் என நினைத்து விட்டார். ஆனால் விஷயமே வேற!

    பேன்ட் - உள்ளாடை

    பேன்ட் - உள்ளாடை

    சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக் கொண்டு பாத்ரூமுக்குள் சென்றதும், தனது பேன்ட் மற்றும் உள்ளாடையை கழட்ட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் அந்த பயணி. அந்த பெண்ணும் உள்ளாடை முதல் கழட்டி உதவினார். பிறகு சிறுநீர் கழித்துவிட்டு, தனது ஆணுறுப்பை வெளியில் காட்டியவாறே பெண் ஊழியரைக் கூப்பிட்டார்.

    அந்தரங்கம்

    அந்தரங்கம்

    இதைக்கண்டு அதிர்ந்த அந்த பெண் துணியால் ஆணுறுப்பை மூடிக்கொள்ளுமாறும், பிறகு சக்கர நாற்காலியில் அழைத்து சென்று சீட்டில் உட்கார வைக்கிறேன் என்றும் சொன்னார்.ஆனால் அந்த பயணி தனது அந்தரங்கத்தை வெளியில் காட்டியவாறே அவரை அழைத்துள்ளார்.

    பேஸ்புக் போஸ்ட்

    வேறு வழியில்லாமல் அப்பெண் வரவே, அவரிடம் தனக்கு கால் கழுவி விடுமாறும் வற்புறுத்தியுள்ளார். என்ன செய்வது என்று தெரியாமல் விமான ஊழியர்கள் அதையும் செய்துள்ளனர். இந்த நபரின் செயல் குறித்து முறைப்படி பின்னர் புகார் கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள பேஸ்புக் போஸ்ட் பெரும் வைரலாகியுள்ளது.

    ஆண் பணியாளர்கள்

    ஆண் பணியாளர்கள்

    மாற்றுத்திறனாளி என்று உதவ போனால், இப்படி பெண்ணிடம் பயணி நடந்து கொண்ட சம்பவம் விமான நிலைய அதிகாரிகளுக்கு பெரிய அதிர்ச்சியை தந்துவிட்டது. இதுபோன்ற மாற்று திறனாளிகளுக்கு உதவுவதற்கு என்றே ஆண் பணியாளர்கள் வேலையில் அமர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் பலமாக எழுந்துள்ளது.

    English summary
    Passenger trying to mislead the Flight Attendants to wipe him down during a flight.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X