For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சான்பிரான்சிஸ்கோ ஏர்போர்ட்டில் ஒரு ஹேப்பி பெர்சன்.. பெயர் லிலு.. செய்யும் வேலையெல்லாம் செம!

Google Oneindia Tamil News

Recommended Video

    சான்பிரான்சிஸ்கோ ஏர்போர்ட்டில் பயணிகளை மகிழ்விக்கும் லிலு

    சான்பிரான்சிஸ்கோ : பன்றிகளால் பறக்க முடியாவிட்டாலும், தங்களது வியாபாரம், சொந்த விவகாரங்களுக்காக விமானங்களில் பறந்து செல்லும் விமான பயணிகளின் பயணக்களைப்பை அவற்றால் போக்க முடியும் என்பதை லிலூ என்ற பன்றி தற்போது நிரூபித்துள்ளது.

    சான்பிரான்சிஸ்கோ சர்வதேச விமானநிலையத்தின் கேளிக்கை படைப்பிரிவை சேர்ந்த 5 வயதான ஜூலியானா என்ற லிலூ என்ற பன்றி விமான பயணிகளை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் செயல்களில் ஈடுபட்டு அனைவரையும் கவர்ந்து வருகிறது.

    விமான பைலட்டின் கேப் மற்றும், கால்நகங்களில் பளீரென்ற சிவப்பு நெயில்பாலீஷ் போன்றவற்றை போட்டுக்கொண்டு கவர்ச்சியாக விமானநிலையத்தின் புறப்பாடு பகுதியில் வலம்வரும் இந்த பன்றியை பார்ப்பவர்கள், தங்களது பார்வையை சட்டென்று அதன் மீதிருந்து எடுத்துவிட முடியாது.

    கேளிக்கை அளிக்கும் விலங்குகள்

    கேளிக்கை அளிக்கும் விலங்குகள்

    விமானங்களில் வியாபாரம் நிமித்தமாக தொடர் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளின் மனஅழுத்தங்களை போக்கும்வகையில், விமானநிலையங்களில் விலங்குகளை வைத்து அவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் கேளிக்கை படைப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இதில் பயிற்சி அளிக்கப்பட்ட விலங்குகள் ஈடுபடுத்தப்படுகின்றன.

    பயணிகள் குதூகலம்

    பயணிகள் குதூகலம்

    இந்த வகையில் உலகிலேயே முதல்முறையாக சான்பிரான்சிஸ்கோ சர்வதேச விமானநிலையத்தில் பயணிகளை கவரும்வகையில் லிலூ என்ற 5 வயது பன்றி ஒன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பன்றியை பார்க்கும் பயணிகள் தங்களது சிரமங்களை மறந்து சிறிதுநேரம் அதனுடன் தங்களது நேரத்தை செலவிட்டு செல்கின்றனர்.

     பளீச் நெயில்பாலீஷ்

    பளீச் நெயில்பாலீஷ்

    தலையில் பைலட் கேப் அணிவிக்கப்பட்டுள்ள லிலூவின் கால் விரல் நகங்களிலும் பளிச்சென சிகப்பு நிற நெயில் பாலீஷ் போடப்பட்டுள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது. விமானநிலையத்தின் புறப்பாட்டு பகுதியில் லிலூ அங்கும் இங்கும் மிதமான நடைபயில்வது பயணிகளை மேலும் குஷியாக்கி வருகிறது.

     பன்றியுடன் செல்பி

    பன்றியுடன் செல்பி

    தன்னை நாடிவரும் பயணிகளுக்கு தன்னுடைய காலைத் தூக்கி ஷேக் ஹாண்ட் செய்யும் லிலூ, மேலும் தன்னுடன் செல்பி எடுக்க முனைபவர்களுக்கும் அழகாக போஸ் கொடுக்க தவறுவதில்லை. இதனால், பயணிகளின் விருப்பத்திற்குரிய ஒன்றாக லிலூ மாறியுள்ளது. மேலும் இதனிடம் உள்ள பொம்மை பியானோவின் இசையும் பயணிகள் தங்கள் கவலைகளை மறக்க காரணமாகியுள்ளது.

    பியானோவில் இசையை வெளியிட்ட லிலூ

    பியானோவில் இசையை வெளியிட்ட லிலூ

    கலிபோர்னியாவின் சான் ராமான் பகுதியிலிருந்து சான்பிரான்சிஸ்கோ விமானநிலையத்திற்கு வந்த எட்டு வயது கேதே ஸ்க்ரோடர் என்ற சிறுவன், லிலூ தன்னுடைய பியானோ மூலம் இசையை வெளியிட்டதைக் கண்டு மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று, கூச்சலிட்டான்.

    ஆர்கானிக் காய்கறிகள்

    ஆர்கானிக் காய்கறிகள்

    உயர்பதவிகளில் இருப்பவர்களுக்கு கிடைக்கும் அனைத்துவிதமான சொகுசுகளும் இந்த லிலூவிற்கும் கிடைக்கிறது. விமானநிலைய பணியை மேற்கொண்டுள்ள லிலூ மற்றும் அதன் உரிமையாளர் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ஒரு சொகுசு அபார்ட்மெண்ட்டில் தங்கியுள்ளனர். அங்கு பஞ்சுமெத்தை, ஆர்கானிக் காய்கறிகள் என்று வாழ்க்கையை என்ஜாய் செய்கிறது லிலூ.

    English summary
    Pig makes passengers in Sanfrancisco Airport happy
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X