For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விமானத்தில் கேட்ட வித்தியாசமான சத்தம்.. கதறிய பயணிகள்.. கண்டுகொள்ளாத பைலட்

பிரிட்டிஷ் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் ஒன்றில் இருந்து வந்த வித்தியாசமான சத்தம் காரணமாக அதில் இருந்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    விமானத்தில் கேட்ட வித்தியாசமான சத்தம்..கதறிய பயணிகள்..வீடியோ

    லண்டன்: பிரிட்டிஷ் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் ஒன்றில் இருந்து வந்த வித்தியாசமான சத்தம் காரணமாக அதில் இருந்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். அந்த வித்தியாசமான சத்தம் 10 மணி நேரமாக கேட்டதாக புகார் அளித்து உள்ளனர்.

    முதலில் அந்த சத்தம் வெளியில் இருந்து வருவதாக பயணிகள் நினைத்து இருக்கின்றனர். மேலும் பெரிய அசம்பாவிதம் எதோ நடக்க போவதாகவும் நினைத்து பயந்து இருக்கின்றனர்.

    தற்போது அந்த விமானத்தில் ஏற்பட்ட சத்தத்திற்கு என்ன காரணம் என பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்து இருக்கிறது. அவர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளனர்.

    விமானத்தில் கேட்ட வித்தியாசமான சத்தம்

    விமானத்தில் கேட்ட வித்தியாசமான சத்தம்

    பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று லண்டனில் இருந்து லாஸ் வேகாஸுக்கு சில நாட்களுக்கு முன்பு புறப்பட்டு இருக்கிறது. அந்த விமானம் புறப்பட்ட சில மணி நேரத்தில் அதில் இருந்து மிகவும் வித்தியாசமான சத்தம் ஒன்று வந்து இருக்கிறது. மேலும் படங்களில் காட்டப்படுவது போல விமானம் வெடித்துவிடுமோ என்று பயணிகள் பயந்து இருக்கின்றனர். இந்த சத்தம் 10 மணி நேரமாக கேட்டு இருக்கிறது. எந்த இடத்தில் இருந்து சத்தம் வருகிறது என்பது விமான பணிப்பெண்களுக்கு கூட தெரியாமல் போய் இருக்கிறது. இது குறித்து புகார் அளித்தும் விமானி கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.

    டிவிட்டர் முழுக்க சண்டை

    10 மணிநேர மோசமான பயணத்தை முடித்து வந்த பயணிகள் தற்போது அந்த அனுபவம் குறித்து தங்கள் டிவிட்டர் பக்கத்தில் எழுதி உள்ளனர். அதில் பலரும் தங்களது கோவத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் இதில் அவதிப்பட்ட பயணிகளுக்கு மிகவும் குறைந்த அளவில் 20 பவுண்ட் மதிப்புள்ள செக் மட்டும் இழப்பீடாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த விமானத்தில் தான் பட்ட கஷ்டம் குறித்து ஒரு பெண் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

    மன்னிப்பு கேட்டது

    இந்த நிலையில் தங்களின் தவறுக்கு அந்த பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் நிர்வாகம் மன்னிப்பு கேட்டு இருக்கிறது. இனி இது போன்ற காரியங்கள் நடக்காது என்றும் கூறியுள்ளது. மேலும் இது குறித்து புகார் அளித்த பயணிகள் அனைவரிடமும் தனியாக பேச முடிவு செய்து இருக்கிறது.

    காரணம் என்ன

    காரணம் என்ன

    தற்போது அந்த விமானத்தில் இருந்து வந்த சத்தத்திற்கு காரணம் என்ன என்று அந்த நிறுவனம் விளக்கி இருக்கிறது. அதன்படி அந்த விமானத்தில் இருந்த ஆக்சிசன் சிலிண்டரில் எதோ பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. பிரச்சனை காரணமாக் ஒரே ஒரு ஆக்சிஜன் மாஸ்க் வெளியே வந்து தொங்கி இருக்கிறது. இது உருவாக்கிய சத்தமே விமானம் முழுக்க கேட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து தொழில்நுட்ப ரீதியாக விசாரணை செய்ய முடிவு எடுத்து இருக்கிறது.

    English summary
    A British Airways' flight from which was going London's Heathrow Airport to Las Vegas has stopped after bizarre sound issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X