For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

15 ஆண்டுகளாக இந்திய அழகிகளுக்கு எட்டாகனியாக இருக்கும் மிஸ் யுனிவர்ஸ் பட்டம்

By Siva
Google Oneindia Tamil News

அமெரிக்காவின் மயாமி நகரில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் 22 வயதான கொலம்பியா அழகி பாலினா வேகா பட்டத்தை வென்றார். லாரா தத்தா தான் கடைசியாக இந்தியாவில் இருந்து இந்தப் பட்டத்தை வென்றவர்.

இந்த ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் இந்தியா, அமெரிக்கா உள்பட 88 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். நேற்று நடந்த இறுதிச் சுற்றில் பாலினா வென்று பட்டத்தைத் தட்டிச் சென்றார்.

நொயோனிதா லோத்

நொயோனிதா லோத்

பிரபஞ்ச அழகிப் போட்டியில் கலந்து கொண்ட இந்திய அழகி நொயோனிதா லோத் முதல் 10 இடங்களுக்குள் கூட வரவில்லை. இதனால் இந்தியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

உலக அழகிப் போட்டி

உலக அழகிப் போட்டி

மிஸ் வேர்ல்ட் உலக அழகிப் போட்டியிலாவது இந்திய அழகி முதல் 10 இடத்திற்குள் வந்தார். லோத் அதைக் கூட செய்ய முடியாமல் போய் விட்டது.

எட்டாக் கனி

எட்டாக் கனி

மிஸ் வேர்ல்ட் பட்டமும், மிஸ் யுனிவர்ஸ் அழகிப் பட்டமும் இந்தியாவிற்கு பல ஆண்டுகளாக எட்டாக்கனியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சுஷ்மிதா சென்

சுஷ்மிதா சென்

1994ம் ஆண்டு தான் இந்திய அழகி முதன்முதலாக மிஸ் யுனிவர்ஸ் அழகிப் பட்டத்தை வென்றார். அந்த பட்டத்தை வென்றது சுஷ்மிதா சென்.

லாரா தத்தா

லாரா தத்தா

சுஷ்மிதாவை அடுத்து 2000ம் ஆண்டு மிஸ்யுனிவர்ஸ் அழகியாக தேர்வு செய்யப்பட்டார் லாரா தத்தா. சுஷ்மிதாவும், லாராவும் பின்னர் நடிகைகளாகிவிட்டனர்.

யாருமே இல்லை?

யாருமே இல்லை?

லாராவை அடுத்து இதுவரை எந்த இந்திய அழகியும் மிஸ் யுனிவர்ஸ் அழகிப் பட்டம் வென்றது இல்லை. 15 ஆண்டுகளாக இந்தியாவுக்கு பிரபஞ்ச அழகிப் பட்டம் கிடைக்கவே இல்லை. இது இந்தியர்களுக்கு ஏமாற்றம்தான்.

English summary
Miss Columbia Paulian Vega has been crowned Miss Universe at a grand function held in Miami. Lara Dutta was the last Indian beauty who was crowned Miss Universe.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X