For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மிஸ்.அமெரிக்காவை ஆடச் சொல்லி பூ கொடுத்த பள்ளி மாணவன் சஸ்பெண்ட்...

Google Oneindia Tamil News

நியூயார்க்: பள்ளி விழாவில் பங்கேற்ற மிஸ்.அமெரிக்காவை வற்புறுத்தி நடனமாடச் சொல்லி வற்புறுத்தியதற்காக மாணவர் ஒருவரை அமெரிக்கப் பள்ளி ஒன்று சஸ்பெண்ட் செய்துள்ளது.

மிஸ் அமெரிக்கா அழகி பட்டம் வென்ற அமெரிக்க வாழ் இந்தியர் நினா டவுலூரி, பென்சில் வேனியாவில் உள்ள சென்ட்ரல் பார்க் உயர்நிலைப்பள்ளி விழாவில் பங்கேற்றார். மாணவர்கள் மத்தியில் கலாசார வேற்றுமை, அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித பாடத்தின் முக்கியத்துவம் குறித்து அங்கு பேச திட்டமிருந்தார் நினா.

அதற்கு முன்னதாக, மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டிருந்த நினாவை நடனமாடச் சொல்லி மாணவர் ஒருவர் வேண்டுகோள் விடுத்தார். இக்காரணத்திற்காக அம்மாணவரை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

அனுமதி மறுப்பு...

அனுமதி மறுப்பு...

பாட்ரிக் பார்வெஸ் (18) என்ற மாணவன் ஏற்கனவே தான் இவ்வாறு செய்ய இருப்பதாக பள்ளி நிர்வாகத்திடம் அனுமதி வேண்டியிருந்தான். ஆனால், அதற்கு அவர்கள் மறுப்புத் தெரிவித்திருந்தனர்.

பிளாஸ்டிக் பூ....

பிளாஸ்டிக் பூ....

ஆனபோதும், அழகி நினாயை மேடையில் நடனமாடும்படி வலியுறுத்தி நிகழ்ச்சியின் போது மேடைக்கு சென்று அவரிடம் பிளாஸ்டிக் பூ ஒன்றை பரிசளித்தான் மாணவன் பாட்ரிக்.

சிரித்து சமாளித்த அழகி...

சிரித்து சமாளித்த அழகி...

பாட்ரிக்கின் இச்செயலால் அழகி நினா கோபம் அடையவில்லை. மாறாக சிரித்து சமாளித்தார். அதை பார்த்து சக மாணவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

சஸ்பெண்ட்...

சஸ்பெண்ட்...

ஆனால் மாணவரின் இச்செய்கையால் எரிச்சலைடைந்த பள்ளி நிர்வாகம், பாட்ரிக்கை பள்ளியில் இருந்து 3 நாட்கள் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளது.

English summary
Patrick Farves, 18, handed Miss America Nina Davuluri a flower after he asked the beauty queen to prom. She smiled but he was suspended from school shortly after the stunt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X