For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அல்-சபாப் இயக்கத் தலைவர் மீது அமெரிக்கா தாக்குதல் – இறந்திருக்க 80 சதவீதம் வாய்ப்பு!

Google Oneindia Tamil News

மொகடிசு: சோமாலியாவின் அல்- சபாப் தீவிரவாத குழுத்தலைவரின் மீது அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகன் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

சோமாலியா நாட்டில் சோமாலிய இஸ்லாமிய தீவிரவாத குழுவான அல்-சபாப் செயல்பட்டு வருகிறது.

அக்குழுவின் தலைவரான அகமது அப்டி கொடானே வாகனத்தில் சென்று கொண்டிருப்பது குறித்து அமெரிக்க படைகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

வான் வழித்தாக்குதல்:

வான் வழித்தாக்குதல்:

கடலோர நகரமான பராவேயை நோக்கி அவர் வாகனத்தில் சென்று கொண்டிருப்பதை அறிந்த அமெரிக்கா, குறிப்பிட்ட இரு வாகனங்கள் மீது வான் வழி தாக்குதல் நடத்தியது.

ஆறு தீவிரவாதிகள் இறப்பு:

ஆறு தீவிரவாதிகள் இறப்பு:

இத்தாக்குதலில் ஆறு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அத்தீவிரவாத இயக்கத்தின் தளபதியான அபு முகமது தெரிவித்தார்.

கொடானா பலியா?:

கொடானா பலியா?:

அவர்களது தலைவரான கொடானேவும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டாரா என்பதை உறுதி செய்ய அவர் மறுத்துவிட்டார்.

நிலநடுக்கம் போல் பயங்கரம்:

நிலநடுக்கம் போல் பயங்கரம்:

அமெரிக்கா தான் இத்தாக்குதலை நடத்தியததாக பெண்டகன் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலை நேரில் கண்ட ஒருவர் கூறுகையில், "வான் வழி தாக்குதல் நடைபெற்ற போது நில நடுக்கம் ஏற்பட்டது போல் மிக அதிக அளவில் ஓசை கேட்டது" என்று கூறினார்.

சப்லாலே நகர் அருகே:

சப்லாலே நகர் அருகே:

சப்லாலே நகர் அருகே இத்தாக்குதல் நடைபெற்றதாக அப்பகுதி கவர்னரான அப்டிகாதிர் முகமது நார் கூறியுள்ளார். எனினும் இத்தாக்குதலில் கொடானே இறந்திருக்க 80 சதவீதம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

English summary
American military forces carried out an operation against the Islamic militant group Al-Shabab in Somalia on Monday, according to the Pentagon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X