For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஷ்யா போர் தொடுத்தால்? - ஆயுதங்களும், ராணுவமும் பற்றாமல் தவிக்கும் அமெரிக்கா; அச்சத்தில் பென்டகன்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ரஷ்யாவுடன் போர் வந்தால் அதைச் சமாளிக்கக் கூடிய வகையில் அமெரிக்க ராணுவம் இல்லை என்ற தகவல் ஆச்சரியத்தைக் கொடுக்கலாம். ஆனால் உள்ளுக்குள் அமெரிக்காவின் பென்டகன் இந்தக் கவலையில்தான் உள்ளதாம்.

உண்மையிலேயே அமெரிக்க ராணுவம் ரஷ்யாவுடன் போருக்குத் தயார் நிலையில் இல்லை என்பதே உண்மையாம். வெளியில் அப்படித் தெரியாவிட்டாலும் கூட உள்ளுக்குள் இதுதான் உண்மை நிலையாம்.

கோடைகாலத்தில் நடத்தப்பட்ட பல்வேறு ராணுவப் பயிற்சிகளின்போது இது தெரிய வந்ததாம். ரஷ்யா தங்கள் மீது தாக்குதல் நடத்தினால் அல்லது ரஷ்யாவுடன் தாங்கள் மோத நேரிட்டால் அதை எப்படி மேற்கொள்வது என்பதில் அமெரிக்க ராணுவத்தினருக்கு போதிய பயிற்சி இல்லை என்று கூறப்படுகிறது.

திறன் குறைவான தரைப்படை:

திறன் குறைவான தரைப்படை:

இதுதொடர்பாக இரண்டு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பேட்டியும் அளித்துள்ளனர். கடந்த 15 வருடமாகவே அமெரிக்க ராணுவம், தீவிரவாத எதிர்ப்புப் போரில்தான் தீவிரக் கவனம் செலுத்தி வருகிறது. இதனால் தரைப்படையின் ஆயத்த நிலை மிகவும் குறைவாக, திறன் குறைவாக உள்ளதாம்.

பின்னடைவு நிச்சயம்:

பின்னடைவு நிச்சயம்:

இப்படிப்பட்ட நிலையில் ரஷ்யா போரில் குதித்தால் அது அமெரிக்கப் படையினருக்கு நிச்சயம் பின்னடைவை ஏற்படுத்துமாம்.

நீண்ட நாள் போர் சாத்தியம் இல்லை:

நீண்ட நாள் போர் சாத்தியம் இல்லை:

மேலும் ரஷ்யாவைக் குறி வைத்துத் தாக்கக் கூடிய ஏவுகணைகளின் அளவும் பற்றாக்குறையாக உள்ளதாம். குறைந்த அளவிலான ஏவுகணகளை வைத்துக் கொண்ட நீண்ட நாள் போரில் நிச்சயம் அமெரிக்காவால் ஈடுபட முடியாதாம்.

ஆயுதங்கள் பற்றாக்குறை:

ஆயுதங்கள் பற்றாக்குறை:

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "இப்போதுள்ள நிலையில் ரஷ்யாவுடன் போர் மூண்டால் அதில் நிச்சயம் அமெரிக்காவால் வெல்ல முடியும். ஆனால் தற்போது கைவசம் உள்ள அத்தனை ஆயுதங்களையும் அதற்காக நாம் செலவிட நேரிடும். நம்மிடம் மிச்சம் என்று எதுவுமே இருக்காது. நாங்கள் தயார் நிலையில் இல்லை என்பதே உண்மை" என்றார்.

சோர்வடைந்த வீரர்கள்:

சோர்வடைந்த வீரர்கள்:

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடந்த போரின்போது பெருமளவிலான ஆயுதங்களை காலி செய்து விட்டதாம் அமெரிக்கா. வீரர்களும் கூட அந்தப் போர்களில் அதிக அளவில் ஈடுபட்டு சோர்வடைந்து போய் விட்டனராம்.

பகையை புதுப்பிக்கும் அமெரிக்கா:

பகையை புதுப்பிக்கும் அமெரிக்கா:

சமீப காலமாக ரஷ்யாவை மீண்டும் முக்கிய எதிரியாக அமெரிக்கா பார்க்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தங்களுக்குள் போர்ப் பயிற்சியையும் அது நடத்த ஆரம்பித்துள்ளது. குறிப்பாக உக்ரைன் விவகாரத்தை வைத்து ரஷ்யாவுடனான பகையை அமெரிக்கா தானாகவே புதுப்பித்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

அணு ஆயுதக் கூட்டம்:

அணு ஆயுதக் கூட்டம்:

ரஷ்யாவிடம் தற்போது 4000 அணு ஆயுதங்கள் உள்ளதாக அமெரிக்காவில் கூறுகிறார்கள். உலகிலேயே அதிக அளவில் ராணுவத்திற்காக செலவிடும் 3வது நாடு ரஷ்யா. ரஷ்யாவை விட பல வகையிலும் அமெரிக்க ராணுவம் உயர்வானதுதான் என்றாலும் கூட ரஷ்யாவிடம் உள்ள சில முக்கியமான அம்சங்கள் அமெரிக்காவிடம் இல்லை. இது அமெரிக்காவுக்கு நிச்சயம் பாதகமானது என்பதில் சந்தேகமே இல்லை.

சமாளிக்கும் திறன் அதிகம்:

சமாளிக்கும் திறன் அதிகம்:

குறிப்பாக விமானப்படையை எடுத்துக் கொண்டால், அது அமெரிக்காவை விட ரஷ்யாவுக்கே சாதகமானதாக உள்ளது. அமெரிக்க விமானப்படை பல நாடுகளை நம்பி செயல்பட வேண்டியுள்ளது. ரஷ்யாவுக்கு அப்படி இல்லை. அமெரிக்கா நேட்டோ நாடுகளையே ரஷ்யாவுக்கு எதிராக முக்கியமாக நம்பியிருக்க வேண்டும். மொத்தம் 19 நாடுகள் இந்த அமைப்பில் உள்ளனர். ஆனால் நேட்டோ படையை சமாளிக்கக் கூடிய வகையில் ரஷ்யப் படைகள் இருப்தாக கூறப்படுகிறது.

ஆயத்த நிலையில் ரஷ்யா:

ஆயத்த நிலையில் ரஷ்யா:

சமீபத்தில் ரஷ்யா நடத்திய ஒரு போர்ப் பயிற்சியின்போது அதிரடியாக 80,000 பேரை ஒரே இடத்தில் குவித்து அது நேட்டோ நாடுகளை அலற வைத்தது.
ரஷ்யா, வெறும் ராணுவத்தையும், பிற படைகளையும் மட்டும் நம்பியிருக்கவில்லை. மாறாக சைபர் போர், ரகசிய ஏஜெண்டுகள் என சகலவிதத்திலும் அது எப்போதுமே ஆயத்த நிலையில் இருப்பதாக சொல்கிறார்கள்.

எங்கே, எப்போ?:

எங்கே, எப்போ?:

ஒருவேளை போர் வெடித்தால் கூட ரஷ்யா போரை எப்படி ஆரம்பிக்கும், எந்த இடத்திலிருந்து ஆரம்பிக்கும் என்பதே அமெரிக்காவுக்கு புரியாத புதிராக உள்ளது. அந்த அளவுக்கு ரஷ்யாவின் மனதைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அது இறுக்கமாக இருக்கிறது.

உலக அழிவின் தொடக்கம் அது:

உலக அழிவின் தொடக்கம் அது:

பனிப் போர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அமெரிக்கா இரண்டரை லட்சம் படையினரை ஐரோப்பிய நாடுகளில் குவித்தது. முதலாம் உலகப் போருக்குப் பின்னர் இநத் எண்ணிக்கை 91,000 ஆயிரமாக குறைந்தது. தற்போது இது 31,000 என்ற அளவில் உள்து. எல்லாம் சரி, அமெரிக்கா, ரஷ்யா இடையே போர் வருமா என்ன.. வந்தால் மிஞ்சப் போவது என்று எதுவுமே உலகில் இருக்காது என்பது மட்டும் உறுதி.

English summary
The U.S. military has run the numbers on a sustained fight with Moscow, and they do not look good for the American side.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X