For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரோபோட்களை பணிக்கு அமர்த்தும் அமெரிக்க ராணுவம்.. பாதுகாப்பிற்கான அல்ட்டிமேட் ஏற்பாடு!

அமெரிக்க ராணுவத்தில் விரைவில் எல்லா துறைகளிலும் ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க ராணுவத்தில் விரைவில் எல்லா துறைகளிலும் ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நாட்டு ராணுவ துறை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ராணுவ தலைமையிடமாக பெண்டகன் நீண்ட நாட்களாக ரோபோக்கள் குறித்து ஆராய்ச்சி நடத்தி வருகிறது. அமெரிக்காவும் சீனாவும் தங்கள் ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த இருக்கிறார்கள்.

இந்தியாவில் நாம் ரோபோவை ராணுவத்தில் பயன்படுத்தலாமா என்று எந்திரன் படத்தை வைத்து விவாதம் நடத்திக் கொண்டு இருக்கும் சமயத்தில் அமெரிக்கா இதில் பெரிய புரட்சியை ஏற்படுத்த உள்ளது. இதுகுறித்த அறிவிப்புகள் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

மனிதர்களுக்கு பதில் ரோபோட்டுக்கள்

மனிதர்களுக்கு பதில் ரோபோட்டுக்கள்

அமெரிக்கா முழுக்க முழுக்க அவர்கள் ராணுவத்தில் மனிதர்களுக்கு பதில் ரோபோக்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. மிக குறைந்த அளவில் மனிதர்களை பயன்படுத்தினால் போதும் என்று முடிவெடுத்துள்ளது. இப்படி எல்லா இடங்களிலும் ரோபோக்களை பயன்படுத்துவதன் மூலம் உயிரிழப்பை குறைக்க முடியும். அதே சமயம் தாக்குதல் மிகவும் துல்லியமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அணு ஆயுத தடை

அணு ஆயுத தடை

இதற்காக பெண்டகனில் கடந்த பல வருடங்களாக ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது. ஆர்டிபிஷியல் இண்டலிஜன்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு திறன் மூலம் செயல்படும் ரோபோக்களை அவர்கள் வடிவமைத்து வருகிறார்கள். இதன் முதற்கட்டமாக அணு ஆயுத தாக்குதலை முன்பே கணிக்கும் ரோபோட்களை உருவாக்க அமெரிக்க ராணுவம் முடிவெடுத்துள்ளது.

குண்டுகள்

குண்டுகள்

அதேபோல் அமெரிக்கவில் பெருமைப்பாலான ராணுவ வீரர்கள், பாதுகாப்பு படையினர் குண்டுகளை அகற்றும் போதுதான் மரணம் அடைகிறார்கள். இதனால் குண்டு வெடிப்பை தடுக்கும் வகையில், ரோபோக்களை பயிற்சி அளிக்க அமெரிக்க ராணுவம் முடிவெடுத்துள்ளது. குண்டு வெடிப்புகளை தடுக்கவும், எத்தகைய குண்டுகளையும் எளிதாக செயலிழக்க செய்யும் ரோபோட்டுக்களை சோதனை செய்து வருகிறது.

எப்போதில் இருந்து வரும்

எப்போதில் இருந்து வரும்

மொத்தம் ஐந்து படைகளுடன் ஆறாவது படையாக இந்த ரோபோக்கள் சேர்க்கப்பட உள்ளது. ஆனால் இது எப்படி நடைபெறும் என்று விளக்கமாக தெரிவிக்கப்படவில்லை. முதற்கட்டமாக அமெரிக்க ராணுவம் இன்னும் சில மாதங்களில் ரோபோக்களை வைத்து சில சோதனைகள் நடத்த இருக்கிறது. அதற்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக ரோபோக்களை பணிக்கு அமர்த்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

English summary
Pentagon pushes AI research to introduce Robots in Army. By next year end nearly 30 percent of Army members will be robots with AI according to the sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X