For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

51 ஆய்வுக் கூடங்களில் ஊடுருவிய உயிர்க்கொல்லி ஆந்த்ராக்ஸ்: பெண்டகன் அதிர்ச்சி தகவல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கடந்த 10 வருடங்களில் அமெரிக்காவின் பெண்டகனில் இருந்து ஆந்த்ராக்ஸ் கிருமிகள் மொத்தம் 51 ஆய்வுக்கூடங்களுக்கு போயுள்ளது தெரியவந்துள்ளது.

அமெரிக்க சுற்றுச்சூழலில் நிலவும் நோய் கிருமிகளை கண்டறிந்து தடுக்கும் வகையில் ராணுவ தலைமையகமான பெண்டகனில் பரிசோதனைக்கூடம் இயங்கி வருகிறது. இங்கிருந்து அமெரிக்காவின் பிற ஆய்வுக்கூடங்களுக்கு அடிக்கடி நோய்க்கிருமிகளின் மாதிரிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

Pentagon says live anthrax went to 51 US labs and three countries

இவ்வாறு அனுப்பப்பட்டதில், உயிர்க்கொல்லி ஆந்த்ராக்ஸ் பாக்டீரியாவும் தெரியாமல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்காவிலுள்ள 17 மாகாணங்கள் மற்றும் 3 வெளிநாடுகளிலுள்ள ஆய்வுக் கூடங்களுக்கு இவ்வாறு அறியாத்தனமாக ஆந்த்ராக்ஸ் சென்றுள்ளதாம்.

இதை பெண்டகன் உறுதி செய்துள்ளது. ஆனால், எப்படி இந்த கிருமிகள் வெளியேறின என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை. இதில் சதி திட்டம் உள்ளதா அல்லது தெரியாமல் கிருமிகள் போனதா என்பது குறித்து பெண்டகன் ஆய்வு செய்து வருகிறது.

English summary
The Pentagon told reporters Wednesday that 51 laboratories received shipments of anthrax, across 17 states (plus D.C.) and three foreign countries over a period of at least 10 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X