For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிட்னி முற்றுகை நடந்த இடத்தில் போட்டி போட்டு செல்ஃபி எடுக்கும் மக்கள்

By Siva
Google Oneindia Tamil News

சிட்னி: சிட்னியில் தீவிரவாதியின் பிடியில் உள்ள ஹோட்டல் பகுதியில் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு செல்ஃபி எடுத்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள லின்ட் கபே ஹோட்டலுக்குள் இன்று காலை புகுந்த தீவிரவாதிகள் 50 பேரை பிணையக் கைதிகளாக பிடித்தனர். பிணையக் கைதிகளில் 5 பேர் தப்பியோடிவிட்டனர். இந்நிலையில் ஹோட்டலுக்குள் ஒரேயொரு ஆயுதம் ஏந்திய தீவிரவாதி மட்டும் இருந்து கொண்டு பிணையக் கைதிகளை மிரட்டி வருகிறார்.

People are taking selfies at the Sydney seige

இந்நிலையில் கைதிகளை கட்டாயப்படுத்தி அவர் கருப்பு நிற கொடியை ஹோட்டலின் ஜன்னல் கன்னாடி வழியாக காட்டுமாறு வற்புறுத்தி வருகிறார். மேலும் நகரில் 4 இடங்களில் குண்டு வைத்துள்ளதாக தீவிரவாதி தெரிவித்துள்ளார். பிணையக் கைதிகளில் ஹைதராபாத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் விஸ்வகாந்தும் ஒருவர்.

நிலைமை இவ்வளவு பரபரப்பாக இருக்க மக்களில் பலர் தீவிரவாதி இருக்கும் ஹோட்டல் பகுதியில் நின்று செல்ஃபி எடுத்து வருகின்றனர்.

45 பேரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் இப்படி பொறுப்பிலாமல் மக்கள் செல்ஃபி எடுப்பதை பலரும் வன்மையாக கண்டித்துள்ளனர். இதற்கிடையே #IllRideWithYou என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் யாராவது மதம் தொடர்பான ஆடை அணிந்து பயணிக்க பயந்தால் துணைக்கு நாங்கள் வருகிறோம் என்று கூறி பலரும் #IllRideWithYou என்ற ஷேக்டேக்குடன் ட்வீட் செய்து வருகின்றனர்.

English summary
People are taking selfies at the Sydney seige area without minding the seriousness of the situation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X