For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிச்சைக்காரர் மீது சுடுதண்ணீர் ஊற்றிய கடைக்காரர்.. ரூ. 20 லட்சம் கொடுத்து உதவிய நெட்டிசன்ஸ்.. வாவ்!

அமெரிக்காவில் பிச்சைக்காரர் ஒருவருக்கு மக்கள் எல்லோரும் சேர்ந்து 20 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து இருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சுடுதண்ணீர் ஊற்றிய கடைக்காரர்... 20 லட்சம் வழங்கிய நெட்டிசன்ஸ்- வீடியோ

    நியூயார்க்: அமெரிக்காவில் பிச்சைக்காரர் ஒருவருக்கு மக்கள் எல்லோரும் சேர்ந்து 20 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து இருக்கிறார்கள்.

    இணையத்தில் வெளியான வீடியோ ஒன்றின் காரணமாக இவருக்கு இவ்வளவு பணம் அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ''சைரகாசை'' சேர்ந்தவர் ஜெர்மி டியூபிரெஸ்னே. சிறுவயதில் இருந்து இவர் வீடு இல்லாமல் இருக்கிறார்.

    இந்த நிலையில் தன்னிடம் இருக்கும் பழைய போனை ஜார்ஜ் செய்து அம்மாவிடம் பேசுவதற்காக அதே பகுதியில் உள்ள ''டன்கின் டொனால்ட்'' உணவகத்திற்கு சென்று இரவில் தூங்குவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.

    வீடியோ வெளியானது

    வீடியோ வெளியானது

    இந்த நிலையில் தினமும் இவர் வருவதை பார்த்து கோபமடைந்த அந்த கடைக்காரர், அவர் மீது தண்ணீர் ஊற்றி இருக்கிறார். அவர் தூங்கும் போதே அவர் மீது தண்ணீர் ஊற்றியுள்ளார். சூடான தண்ணீரை ஊற்றும் போதே ''இங்க வந்து தூங்காதன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்'' என்று கூறியுள்ளார். இதை அவரே வீடியோவாக வெளியிட்டார்.

    பெரிய வைரல்

    இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலானது. எல்லோரும் அந்த கடை ஊழியருக்கு எதிராக பேசினார்கள். எல்லோரும் ஒன்றாக சேர்ந்து அந்த நபருக்கு உதவ வேண்டும் என்று இணையத்தில் குரல் கொடுத்தனர். இதற்காக பிரச்சாரம் போல இணையத்தில் நடத்தி அந்த நபருக்கு பணம் வசூல் செய்தனர்.

    என்ன நடந்தது

    அதே சமயம் இன்னோர் ஆச்சர்யமும் நடந்து இருக்கிறது. அதே பகுதியில் இருக்கும் வீடு இல்லாத நபர்களும், பிச்சைக்காரர்களும் சேர்ந்து அந்த கடைக்கு சென்று இருக்கிறார்கள். அந்த கடை வாசலிலேயே அவர்கள் தூங்கி போராட்டம் செய்து இருக்கிறார்கள். கடை நிர்வாகம் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

    வேலையைவிட்டு தூக்கினார்கள்

    வேலையைவிட்டு தூக்கினார்கள்

    இதனால் கடை நிர்வாகம் உண்மையாகவே கீழே இறங்கி வந்தது. அதோடு, அந்த கடையில் அப்போது தண்ணீர் ஊற்றிய நபரையும், அதை வீடியோ எடுத்த நபரையும் வேலையை விட்டு நீக்கி இருக்கிறார்கள். இந்த செய்தி இணையம் முழுக்க வைரல் ஆகியுள்ளது.

    உதவி

    உதவி

    இந்த நிலையில்தான் அந்த ஜெர்மி டியூபிரெஸ்னேவிற்கு ரூ. 20 லட்சம் பணம் அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆம் அந்த பிரச்சாரம் மூலம் இவருக்கு 20 லட்சம் பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்த பணம் நேற்று அவரிடம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

    {document1}

    English summary
    People Donate Rs.20 lakhs to a beggar after a Dunkin' Donuts worker insulted him.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X